கணவன் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்ததால் ஆத்திரம்.. 1 வயது பெண் குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய்!
Woman Killed 1 Year Old Baby Girl | மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் கணவர் இரவு வேலை முடிந்து தாமதமாக வீட்டிற்கு வந்த நிலையில், அவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பெண் ஒருவர் தனது ஒரு வயது குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார்.
லத்தூர், ஜனவரி 21 : மராட்டியத்தில் (Maharashtra) கணவர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு தாமதாமாக வந்ததால் ஆத்திரமடைந்த மனைவி தங்களது ஒரு வயது பெண் குழந்தையை கொலை செய்துள்ளார். வீட்டிற்கு தாமதமாக வந்தது தொடர்பாக தம்பதிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் இந்த கொடூர செயலை செய்துள்ளார். பெற்ற தாயே தனது ஒரு வயது பெண் குழந்தையை கொலை செய்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்ததால் வாக்குவாதம்
மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டம், ஷியாம் நகர் பகுதியை சேர்ந்தவர் 34 வயதான தினக்கூலி தொழிலாளி ஒருவர். இவர் ஜனவரி 19, 2026 அன்று மாலை வேலை முடிந்து தாமதமாக வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் தாமதமாக சென்றது அவரது மனைவிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவருக்கும், அவரது மனைவிக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுக்கொண்டு இருந்த நிலையில், அவரது மனைவி அதிர்ச்சியூட்டும் செயலை செய்துள்ளார்.
இதையும் படிங்க : 1,500 கி.மீ. இலக்கை தாக்கும் ராட்சசன்… குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஏவுகணை… என்ன ஸ்பெஷல்?
கத்தியை கொண்டு குழந்தையை சரமாரியாக தாக்கிய பெண்
இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில், கடும் கோபத்திற்கு உள்ளான அவரது மனைவி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து அவர்களது ஒரு வயது பெண் குழந்தையின் முகம், கை, கால், தலை என உடல் முழுவதும் பல்வேறு இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பிஞ்சு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இதையும் படிங்க : ரூ.6 கோடி மதிப்பிலான 6.5 மி.லி. கொடிய பாம்பு விஷம் பறிமுதல்.. 7 பேர் அதிரடியாக கைது..
தனது மனைவி செய்த செயலை கண்டு அந்த கூலித் தொழிலாளி கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை கைது செய்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.