இந்தியர் போல கையால் பிரியாணி சாப்பிட்ட ஜப்பான் தூதர்…சுவை இன்னும் அதிகமாக இருப்பதாக நெகிழ்ச்சி!
Japanese Ambassador Ono Keiichi: டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் ஜப்பானிய தூதர் ஓணோ கெய்ச்சி இந்தியர்களை போல தனது கைகளால் பிரியாணியை சாப்பிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இது இந்திய நண்பர்களை நெருங்கி வந்தது போல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் ஜப்பானிய தூதர் ஓணோ கெய்ச்சி தனது கைகளால் பிரியாணி சாப்பிடும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய நண்பர்களை பின்தொடர்ந்து நானும் கைகளால் பிரியாணி சாப்பிட முயற்சி செய்தேன். சுஷியை போலவே கையால் சாப்பிடும் போது இன்னும் சுவையாக உள்ளது என்றும், நான் என் நண்பர்களிடம் கொஞ்சம் நெருங்கி விட்டதாக உணர்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். கைகளால் சாப்பிடுவது இந்தியா கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இது சுவைகளை மேம்படுத்துவதோடு மக்களை அவர்களின் உணவோடு இணைக்கும் என்று நம்பப்படுகிறது. இது ஆயுர்வேதத்தில் வேரூன்றிய ஒரு பாரம்பரிய வழக்கமாகவும் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2025-ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ள உணவாக இருந்த பிரியாணி தெற்காசியாவை சேர்ந்த ஒரு அரிசியிவ் தயார் செய்யப்படுவதாகும்.
பிரியாணி சுவைக்கு அடிமையான ஜப்பான் தூதர்
இந்த பிரியாணியானது அரிசி, இறைச்சி அல்லது மீன்கள், காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இப்படி தயார் செய்யப்படும் பிரியாணியின் சுவை ஜப்பானிய தூதர் ஓணோ கெய்ச்சியையும் பாதித்ததாக தெரிகிறது. ஏனென்றால், அவர் அண்மையில் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்ற போது, ஹைதராபாத்தில் பிரியாணி சாப்பிட்டு உள்ளார். அந்தப் புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், தெலுங்கானா வருகையின் போது, உண்மையான ஹைதராபாத் பிரியாணியை சாப்பிட்டேன்.




மேலும் படிக்க: பட்ஜெட் 2026: PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மாற்றம்.. உதவித்தொகை ரூ.11,800 ஆக உயர்வு?”
பிரியாணியின் சுவையால் வியப்படைந்தேன்
அதன் செழுமையான மசாலா பொருட்கள் மற்றும் அசத்தலான சுவைகளால் வியப்படைந்தேன். உண்மையிலேயே போதை தரும் என்று அவர் பதிவின் தலைப்பாக குறிப்பிட்டிருந்தார். இவர் வெளியிட்ட பதிவுகளுக்கு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், ஒரு நபர் கையால் சாப்பிடுவது என்பது உங்கள் சைகை அல்ல. ஆனால், உங்கள் அரவணைப்பையும், வெளிப்படுத்த தன்மையையும் தான் மக்களை உண்மையிலேயே நெருக்கமாக கொண்டு வருகிறது என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
Tried eating biryani by hand — following my Indian friends😊
Like sushi🍣, it tastes even better when eaten by hand.
I feel I’ve come a little closer to my friends!చాలా బాగుంది😋 pic.twitter.com/H55Bf9COuE
— ONO Keiichi, Ambassador of Japan (@JapanAmbIndia) January 20, 2026
ஜப்பானியை கலாசாரத்தை விரும்பும் இந்தியர்கள்
இதே போல, மற்றொரு நபர், எனக்கு என் கைகளால் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். இது ஒரு வித்தியாசமான திருப்தி ஆகும். இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் விளங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர் பதிவிட்ட கருத்தில், நீங்கள் ஒரு வித்தியாசமான கலாச்சாரத்தை இவ்வளவு அழகாக ஏற்றுக் கொள்வதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதனால் தான் இந்தியர்கள், ஜப்பானியர்களையும் உங்கள் கலாச்சாரத்தையும் விரும்புகிறார்கள். உங்கள் மனப்பான்மைக்கு பாராட்டுக்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: 1,500 கி.மீ. இலக்கை தாக்கும் ராட்சசன்… குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஏவுகணை… என்ன ஸ்பெஷல்?