இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாக உள்ளது. இந்த புதிய ரயில் கவுகாத்தி மற்றும் கொல்கத்தா நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் முழுமையாக பொதுமக்களுக்காக மட்டுமே இயக்கப்பட உள்ளது. இதில் விஐபிகளுக்கான ஒதுக்கீடு அல்லது அவசர ஒதுக்கீடு எதுவும் வழங்கப்படாது. மூத்த ரயில்வே அதிகாரிகள் உட்பட யாருக்கும் பயணச் சலுகை அனுமதி இல்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஒரே விதிமுறைகள் தான் நடைமுறையில் இருக்கும். இந்த ரயிலில் உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.