இந்திய ரயில் பயணிகளில் பெரும்பாலானருக்கு ரயில்வேயின் இந்த முக்கிய விஷயம் பற்றி தெரியாமல் இருக்கிறது. நமது ரயில் அதிக நேரம் தாமதமானால், பயணிகளுக்கு இழப்பீடு அல்லது சலுகைகள் பெற உரிமை உள்ளது. ரயில்வே விதிகளின்படி, ஒரு ரயில் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக தாமதமானால், குறிப்பிட்ட சில வகுப்பு பயணிகளுக்கு இலவச உணவு அல்லது சிற்றுண்டி வழங்கப்படும். இந்த சலுகை பொதுவாக, ஏசி வகுப்புகள், நீண்ட தூர ரயில்கள் ஆகியவற்றில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. உணவு மட்டும் அல்ல, ரயில் பயணிகள் பணத்தை திரும்ப பெறவும் வாய்ப்பு உள்ளது. சில சந்தர்ப்பங்களில், பயணிகள் டிக்கெட் ரீஃபண்ட் பெறும் உரிமையும் கொண்டுள்ளனர்.