AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வேறு சாதி ஆணை திருமணம் செய்த இளம் பெண்.. இறுதி சடங்கு செய்த தந்தை.. உபியில் ஷாக் சம்பவம்!

UP Father Performs Daughter's Funeral | உத்தர பிரதேசத்தில் தந்தை ஒருவர் உயிருடன் இருக்கும் தனது மகளுக்கு இறுதி சடங்கு செய்துள்ளார். மகள் வேறு சாதி ஆணை காதல் திருமணம் செய்த நிலையில், ஆத்திரத்தில் அவர் இதனை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேறு சாதி ஆணை திருமணம் செய்த இளம் பெண்.. இறுதி சடங்கு செய்த தந்தை.. உபியில் ஷாக் சம்பவம்!
மகளுக்கு இறுதி சடங்கு செய்த தந்தை
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 13 Oct 2026 23:33 PM IST

லக்னோ, அக்டோபர் 12 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், சந்தோலி மாவட்டத்தில் உள்ள ஜக்திஷ்ராய் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயியான பிரகாஷ் சிங். இவரது மகள் நேஹா சிங். அவருக்கு வயது 20 ஆகும். இவர் அதே பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்புத்துறையில் பணியாற்றி வரும் சாவன் என்ற 24 வயது நபரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் நேஹா, சாவனை திருமணம் செய்துக்கொண்டதன் காரணமாக அவரது தந்தை அவர் உயிருடன் இருக்கும்போதே அவருக்கு இறுதி சடங்கு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகள் வேறு சாதி ஆணை திருமணம் செய்துக்கொண்டதால் தந்தை ஆத்திரம்

சாவன் வேறு சதியை சேர்ந்தவர் என்பதால் நேஹாவின் தந்தை அவர்களின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இருப்பினும் நேஹா, தனது காதலன் சாவன் உடன் வீட்டை விட்டு வெளியேறி வீட்டார் அனுமதி இன்றி காதல் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து இருவரும் தனியாக வீடு ஒன்றை வாடகை எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : டெல்லி – சென்னை விமானத்தில் பவர் பேங்க்கால் தீ விபத்து – பரபரப்பு தகவல்

மீண்டும் நேஹாவை வீட்டிற்கு அழைத்துவர முயன்ற குடும்பத்தினர்

இந்த நிலையில் தான், நேஹாவின் பெற்றோர் அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்துவர முயற்சி செய்துள்ளனர். ஆனால், நேஹாவோ தனது கணவரை பிரிந்து வர முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால், நேஹாவின் தந்தை பிரகாஷ் சிங் மிக கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில் தான், தனது மகள் உயிரிழந்துவிட்டதாக கருதி அவருக்கு அவர் இறுதி சடங்கை செய்துள்ளார்.

இதையும் படிங்க : கோஷங்கள் அல்ல.. மௌன சேவையே ஒரு உண்மையான தேசபக்தனின் அடையாளம்!

இது குறித்து கூறியுள்ள நேஹாவின் சித்தப்பா, எனது அண்ணனின் முடிவை நான் ஆதரிக்கிறேன். நேஹாவை அவர் படிக்க வைத்தார். ஆண் பிள்ளையை போல வளர்த்தார். நேஹா எங்கள் சாதியை சேர்ந்த நபரை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என நினைத்தோம். ஆனால், அவர் வேறு சாதி நபரை திருமணம் செய்துக்கொண்டதால் எங்களுக்கு வருத்தம் என அவர் கூறியுள்ளார்.

நேஹாவின் தந்தை மன உளைச்சலில் செய்த இந்த செயலுக்கு பலர் ஆதரவையும், பலர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us