Supreme Court : பாலியல் குற்றவாளிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு.. அதிர்ச்சியை ஏற்படுத்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு!
25 Lakh Rupees Compensation to Accused | மத்திய பிரதேச மாநிலம், போபால் பகுதியில் 2005 ஆம் ஆண்டு பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 7 ஆண்டுகளுக்கு பதிலாக 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

போபால், செப்டம்பர் 10 : மத்திய பிரதேசத்தில் (Madhya Pradesh) பாலியல் குற்ற வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர், 8 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட நிலையில், அந்த நபருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் (Supreme Court) உத்தரவிட்டுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாலியல் குற்றவாளிக்கு இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாலியல் குற்றவாளிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
மத்திய பிரதேச மாநிலம், போபால் பகுதியில் சோஹன் சிங் என்ற நபர் 2005 ஆம் ஆண்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். ஆனால், ஜாமினில் வெளியே வந்த அவருக்கு வழங்கப்பட்டு இருந்த ஜாமினை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது. பின்னர், 2017 ஆம் ஆண்டு அவரது தண்டனை காலம் வெறும் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அதன்படி அவர் சிறையில் தண்டனை பெற்று வந்தார்.
இதையும் படிங்க : கள்ளக்காதலனுடன் உள்ளாசமாக இருப்பதை கண்ட 6 வயது சிறுமி.. கொலை செய்து கிணற்றில் வீசப்பட்ட கொடூரம்!




7 ஆண்டுகளுக்கு பதிலாக 8 ஆண்டுகள் சிறையில் இருந்ததால் இழப்பீடு
பாலியல் வழக்கில் சோஹன் சிங்குக்கு 7 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் 8 ஆண்டுகளுக்கு பிறகு 2025, ஜுலை மாதத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆக மொத்தம் அவர் இந்த வழக்கில் சுமார் 11 ஆண்டுகள், 7 மாதங்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். தண்டனை காலம் 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்ட போதிலும் அவர் 4.5 ஆண்டுகள் கூடுதலாக சிறையில் இருந்துள்ளார். இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதையும் படிங்க : மது குடிப்பதை நிறுத்த சொன்ன மனைவி.. மொட்டை அடித்து சித்ரவதை செய்த கொடூர கணவன்!
கூடுதல் ஆண்டுகள் சிறையில் இருந்தது தொடர்பாக அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்த அந்த நபருக்கு ரூ.25 லட்சம் பணம் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்று மத்திய பிரதேச அரசுக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.