AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விண்வெளி செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.. தேதியை அறிவித்த இஸ்ரோ!

AXIOM 4 Mission Astronaut shubhanshu shukla : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் 2025 ஜூன் 19ஆம் தேதி தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. முன்னதாக, ஐந்து முறை சுபான்ஷு சுக்லாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது தேதியை இஸ்ரோ அறிவித்துள்ளது.

விண்வெளி செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா.. தேதியை அறிவித்த இஸ்ரோ!
சுபான்ஷு சுக்லாவின்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 14 Jun 2025 14:37 PM IST

டெல்லி, ஜூன் 14 : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் (Shubhanshu Shukla) விண்வெளி பயணம் 2025 ஜூன் 19ஆம் தேதி தொடங்கும் என இஸ்ரோ (ISRO) அறிவித்துள்ளது. முன்னதாக, ஐந்து முறை சுபான்ஷு சுக்லாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது. முதலில் சுபான்ஷு சுக்லா 2025 மே 29ஆம் தேதி திட்டமிட்டிருந்த நிலையில், பின்னர் 2025 ஜூன் 8ஆம் தேதிக்கு வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, ஜூன் 11ஆம் தேதியும் விண்வெளி பயணம் திட்டமிட்டிருந்த நிலையில், அதுவும் ஃபால்கன்-9 (Falcon Rocket) ராக்கெட்டில் ஆக்ஸிசன் கசவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.  மற்றொன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவும் அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது ஆக்சியம் 4 திட்டத்தில் (Axiom 4 Mission) சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் 2025 ஜூன் 19ஆம் தேதி தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

விண்வெளி செல்லும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா

இதன் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழு 2025 ஜூன் 19ஆம் தேதி விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில், “பால்கான் 9 ராக்கெட்டில் காணப்பட்ட திரவ ஆக்ஸிஜன் கசிவு வெற்றிக்கராமாக தீர்க்கப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கக் கூடிய Zvezda Service என்ற மாடியூலில் உள்ள சிக்கல் சரி செய்ய நாசாவுடன் தொடர்பில் இருக்கிறோம். ஆக்ஸியம் 04 திட்டத்தின் பயணம் 2025 ஜூன் 19ஆம் தேதி தொடங்கும்” என தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ஆக்சியம் 4 என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆக்சியம் திட்டத்தின் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் விண்வெளிக்கு செல்கின்றனர்.

தேதியை அறிவித்த இஸ்ரோ

இந்த திட்டத்தை நாசாவுடன் இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. எனவே, இந்த திட்டததில் சுபான்ஷு சுக்லா உட்பட போலந்தின் ஸ்லாவோஜ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியின் திபோர் கபு , அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் பெக்கி விட்சன் ஆகியோரும் செல்கின்றனர். இவர்கள் நான்கு பேரும் ஃபால்கன் 4 என்ற ராக்கெட் மூலம் விண்வெளி செல்கின்றனர்.

இவர்களின் பயணம் 2025 ஜூன் 19ஆம் தேதி தொடங்கும் பட்சத்தில் 10 நாட்கள் விண்வெளியில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். ஆக்ஸியம் 4 திட்டத்தின் மூலம் 40 ஆண்டுகளுக்கு இந்தியா வீரர் விண்வெளிக்கு செல்கிறார். மேலும், இந்த திட்டம் 2026ஆம் ஆண்டு மனிதர்கள் விண்வெளிக்கு அனுப்பும் ககங்யான திட்டத்தின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் உயிரியயல், அறிவியல், நுண்ணுயிர்கள் தொடர்பான சோதனைகளில் கவனம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us