AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Axiom Mission 4 : மீண்டும் சிக்கல்.. 5வது முறையாக தள்ளிவைக்கப்பட்ட விண்வெளிப்பயணம்.. காத்திருக்கும் சுபன்ஷு சுக்லா!

Shubhanshu Shukla mission Postponed : சர்வதேச விண்வெளி மையத்திற்கு 14 நாள் பயணத்திற்காக புறப்பட திட்டமிடப்பட்டிருந்த ஆக்ஸியம்-4 சில கோளாறுகள் காரணமாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது, முன்னதால இன்று 2025, ஜூன் 11ம் தேதி மாலை விண்ணில் ஏவப்பட இருந்தது.

Axiom Mission 4 : மீண்டும் சிக்கல்.. 5வது முறையாக தள்ளிவைக்கப்பட்ட விண்வெளிப்பயணம்.. காத்திருக்கும் சுபன்ஷு சுக்லா!
விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா
C Murugadoss
C Murugadoss | Published: 11 Jun 2025 08:21 AM IST

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லாவின் விண்வெளிக்குச் செல்லும் கனவு மீண்டும் ஒருமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சுபன்ஷு மற்றும் 3 பேரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அழைத்துச் செல்லவிருந்த ஆக்ஸியம்-4 பணி, ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன்-9 ராக்கெட்டில் ஏற்பட்ட கசிவை சரிசெய்ய பொறியாளர்கள் கூடுதல் நேரம் கேட்டதால், தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று 2025, ஜூன் 11ம் தேதி மாலை ராக்கெட் ஏவப்பட்ட நேரம் குறிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஏற்கெனவே 4 முறை தள்ளிவைக்கப்பட்ட பிளான் தற்போது மீண்டும் ஒருமுறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது

ஸ்பேஸ்எக்ஸ் விளக்கம்


இது குறித்து தெரிவித்துள்ள ஸ்பேஸ்எக்ஸ் “நிலையான பூஸ்டர் பரிசோதனையின் போது அடையாளம் காணப்பட்ட LOX கசிவை சரிசெய்ய குழுக்களுக்கு கூடுதல் நேரத்தை வழங்குவதற்காக, புதன்கிழமை பால்கன் 9 ஆக்சியம்-4 ஏவுதலை ஸ்பேஸ்எக்ஸ் தள்ளி வைக்கிறது. பிரச்னைகள் சரி செய்யப்பட்டதும், புதிய தேதியை அறிவிப்போம் ” என்று குறிப்பிட்டுள்ளது

சுபன்ஷு சுக்லா சுமார் 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியராக விண்வெளிக்குச் செல்லவிருந்தார். முன்னதாக, ராகேஷ் சர்மா சோவியத் யூனியனின் இன்டர்காஸ்மோஸ் திட்டத்தின் மூலம் பூமியைச் சுற்றி 8 நாட்கள் சுற்றி வந்தார்.

14 நாட்கள் பிளான்

லக்னோவில் பிறந்த சுபன்ஷு சுக்லா, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) மற்றும் நாசாவின் ஆதரவுடன் இயங்கும் ஆக்ஸியம் ஸ்பேஸின் வணிக விண்கலத்தின் ஒரு பகுதியாக உள்ளார். முன் திட்டமிடப்பட்ட அட்டவணையின்படி, இன்று புதன்கிழமை மாலை புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு 14 நாள் பயணத்திற்காக புறப்பட திட்டமிடப்பட்டது.

யார் இந்த சுபன்ஷு சுக்லா

அக்டோபர் 10, 1985 இல் பிறந்த சுபன்ஷு, சிட்டி மான்டேசரி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, பின்னர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்ந்த இவர், சுகோய்-30 MKI, MiG-29, ஜாகுவார் மற்றும் டோர்னியர்-228 உள்ளிட்ட பல்வேறு விமானங்களில் 2,000 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IIS) விண்வெளி பொறியியலில் MTech பட்டமும் பெற்றுள்ளார்.

 ககன்யான் பணியின் ஒரு பகுதி

இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, 2019 ஆம் ஆண்டு ககன்யான் பணிக்கான இந்தியாவின் விண்வெளி வீரர் குழுவில் அங்கத் பிரதாப், பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் மற்றும் அஜித் கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ககன்யான் 2027 ஆம் ஆண்டு ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us