Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆட்டம் காட்டப்போகும் கொரோனா? காத்திருக்கும் ஆபத்து.. பாபா வங்காவின் திடுக்கிடும் கணிப்புகள்!

Covid Baba Vanga Prediction : உலக நாடுகளில் கொரோனா தொற்றுகள் அதிகரித்தும் வருகிறது. இந்த நிலையில், வைரஸ் குறித்து பாபா வங்கா கணித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, 2030ஆம் ஆண்டில் மோசமான புதிய வைரஸ் ஏற்படும் என்றும் இதனால் உயிரிழப்புகளும ஏற்படும் எனவும் கணித்துள்ளார்.

ஆட்டம் காட்டப்போகும் கொரோனா? காத்திருக்கும் ஆபத்து..  பாபா வங்காவின் திடுக்கிடும் கணிப்புகள்!
பாபா வங்கா
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 28 May 2025 07:53 AM IST

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் (covid cases) அதிகரித்து வரும் நிலையில், பாபா வங்காவின் (Baba Vanga Prediction) கணிப்புகள் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 2030ஆம் ஆண்டில் மிக மோசமாக புதிய வைரஸ் பரவும் என பாபா வங்கா கணித்திருக்கிறார். ஆனால், அதற்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. உலகில் உள்ள பிரபல தீர்க்க தரிசிகளுள் ஒருவர் பாபா வங்கா. இதுவரை இவர் கணித்த சில விஷயங்கள் அப்படியே நடந்துள்ளன என நம்பப்படுகிறது. பல்கேரியா நாட்டைச் சேர்ந்த இவர், சிறு வயதிலேயே பார்வையை இழந்ததால், கண் முன் நிகழ்வதே பார்க்க முடியாமல் போனதை தவிர, எதிர்கால விஷயங்கள் குறித்து கணித்து வருகிறார். இவர் உயிரிழப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் என்னென்ன நடக்கும் என்பதை அவர் எழுதியே வைத்துள்ளார்.

ஆட்டம் காட்டப்போகும் கொரோனா?

அந்த வகையில், தற்போது அவர் கொரோனா வைரஸ் குறித்து அவர் கணித்துள்ள விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 1999ஆம் ஆண்டு ஜப்பானிய எழுத்தாளர் ரியோ டாட்சுகி The Future as I see It என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார்.

அதில், அவர் கொரோனா குறித்து சில கணிப்புகளை எழுதியுள்ளார். அதாவது, “2020 ஏப்ரல் மாதத்தில் அறியப்படாத வைரஸ் ஒன்று வரும். இது ஏப்ரல் மாதத்தில் உச்சம் அடைந்த பிறகு, மறைந்துவிடும். அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு 2030ஆம் ஆண்டில் மீண்டும் வைரஸ் உச்சமடையும்.

வைரஸ் மிகவும் தீவிரத்துடன் இருக்கும். அதிகமான மக்கள் இதில் உயிரிழப்பார்கள். மீண்டும் உலகளாவிய சுகாதார அமைப்புகளை சீர்குலைக்கும்” என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2030ஆம் ஆண்டுகளுக்கு இன்னும் 4 ஆண்டுகள் இருக்கும் நிலையில், வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

பாபா வங்காவின் திடுக்கிடும் கணிப்புகள்

முன்னதாக, அவர் பாபா வங்காவின் சுனாமி எச்சரிக்கை குறித்து கணிப்பு தற்போது பீதியடைய வைத்துள்ளது. அதாவது, 2025ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் ஜூலை மாதத்தில் மிகப்பெரிய சுனாமி தாக்கம் ஏற்படும்  என்றும் கணித்துள்ளார்.  இது 2011 பேரழிவை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். ஜப்பான், தைவான், இந்தோனேசியா வடக்கு மரியானா தீவுகளில் கடல் கொந்நளிப்பு ஏற்படுவதோடு, பூகம்பம் போன்றவை ஏற்படும் என கணித்துள்ளார்.

1000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

இந்தியாவில் 1009 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கேரளா, மகாராஷ்டிராவில் மட்டும 430 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 69 பேருக்கும், கர்நாடகாவில் 47 பேரும், குஜராத்தில் 83 பேரும், ராஜஸ்தானில் 13 பேரும், மேற்கு வங்கத்தில் 12 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பரவும் கொரோனா தொற்று தீவிரமானது இல்லை என்றும் மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.