காரில் கிடந்த சடலங்கள்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் எடுத்த விபரீத முடிவு!
Haryana Suicide : ஹரியானாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரில் இருந்தபடியே, இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேருக்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவரின் சடலங்களை காரில் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

ஹரியானா, மே 27 : ஹரியானா மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை செய்து கொண்டது (haryana suicide) பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரிலேயே 7 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்த அந்தக் குடும்பம் ஒரு ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹரியானாவுக்கு வந்துள்ளனர். நிகழ்ச்சி 2025 மே 26ஆம் தேதியான இரவு டேராடூனுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் செக்டார்-27 பகுதியில் இரவு 11 மணியளவில் இவர்களது கார் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது, குழந்தை உட்பட 7 பேர் காரில் இருந்தபடியே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதனை அவ்வழியாக சென்ற ஒருவர் பார்த்துள்ளனர். காருக்குள் சிலர் மர்ம முறையில் உயிரிழந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் எடுத்த விபரீத முடிவு
இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காருக்குள் இருந்த 7 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் உயிரிழந்துவிட்டதாக கூறினர். இதனை அடுத்து, 7 பேரின் சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இந்த சம்பவம் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதில், 7 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்தவர்கள் 42 வயதான பிரவீன் மிட்டல், அவரது பெற்றோர், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளது அடையாளம் காணப்பட்டுள்ளது.
பஞ்ச்குலா துணை ஆணையர் ஹிமாத்ரி கௌசிக் மற்றும் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் அமித் தஹியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். சம்பவ இடத்தில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் உறுதிப்படுத்தினர்.
பகீர் காரணம்
கடன் நெருக்கடியால் 7 பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசாரின் கூற்றுப்படி, பிரவீன் மிட்டல் சமீபத்தில் டிராவல் நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இதற்காக அதிக பணத்தை அவர் முதலீடு செய்துள்ளார். ஆனால், அவருக்கு போதிய வருமானம் கிடைக்காததை அடுத்து, தொழிலில் நஷ்டத்தில் சென்றுள்ளது.
இதனால், பிரிவீனுக்கு கடன் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பல மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, கடன் நெருக்கடியில் குடும்பத்தினருன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஒருவர் கூறுகையில், “7 பேரும் காரில் மயக்க நிலையில் கிடப்பதை பார்ப்தேன். காரில்துர்நாற்றம் வீசயது. ஒருவருக்கு பின் ஒருவர் வாந்தி எடுத்தனர். அப்போது காரில் அமர்ந்திருந்த நபர் ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் எங்கள் குடும்பம் தற்கொலை செய்து கொண்டதாகவும், நானும் ஐந்து நிமிடங்களில் இறந்துவிடுவேன் என்று கூறினார்” என்று விவரத்திருக்கிறார்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)