Narendra Modi: 2 ஆண்டுகள் பிரச்னைக்குப் பின் மணிப்பூர் செல்லும் பிரதமர் மோடி!
PM Modi Manipur Visit: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார். ரூ.8,500 கோடி மதிப்பிலான 17 திட்டங்களைத் தொடங்கி வைக்கவும், 14 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.மணிப்பூரின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும், அமைதியை மீட்டெடுக்கவும் இந்த வருகை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிப்பூர், செப்டம்பர் 12: இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் பிரதமர் மோடி இன்று மணிப்பூர் மாநிலம் செல்லவுள்ளது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு அவர், மொத்தம் ரூ.8,500 கோடி முதலீட்டில் 17 திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் எனவும் சொல்லப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வருகை குறித்து பேசிய மணிப்பூர் மாநில தலைமைச் செயலாளர் புனித் குமார் கோயல், பிரதமர் மோடி சூரசந்த்பூரில் உள்ள அமைதி மைதானத்தில் ரூ.7,300 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் என்றும், இம்பாலில் உள்ள காங்லா கோட்டையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்களையும் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவித்தார்.
மேலும் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் இருந்து சூரசந்த்பூருக்கு பிரதமர் மோடி வந்த பிறகு, குக்கி பழங்குடியினர் பெரும்பான்மையாக உள்ள மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட உள்ளூர் இடம்பெயர்ந்த மக்களுடன் அவர் முதலில் கலந்துரையாடுவார் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பீஸ் கிரவுண்டில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிபங்கேற்று உரையாற்றுவார் என்று தலைமைச் செயலாளர் புனித் குமார் கோயல் கூறியுள்ளார்.
Also Read: ரஷ்ய அதிபருடன் கலகலவென உரையாடிய பிரதமர் மோடி!




அதுமட்டுமல்லாமல் பிரதமரின் மணிப்பூர் வருகை, அம்மாநிலத்தில் அமைதிக்கான இயல்புநிலையை மீட்டெடுக்கவும், வளர்ச்சியின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும் வழி வகுக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மணிப்பூர் மற்றும் மத்திய அரசின் சார்பாக, பிரதமர் மோடியை வரவேற்கவும், நிகழ்ச்சியில் பங்கேற்கவும் உள்ளூர் மக்கள் முன்வர வேண்டும் என்று தலைமைச் செயலாளர் புனித் குமார் கோயல் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள்
இதனிடையே பிரதமர் தொடங்கி வைக்கும் 17 திட்டங்களில், புது டெல்லியின் துவாரகாவில் உள்ள மணிப்பூர் பவன் மற்றும் கொல்கத்தாவின் சால்ட் லேக் நகரம், இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள மந்திரிபுக்ரியில் சிவில் செயலகம், புதிய காவல் தலைமையகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் கட்டடம், தெங்னௌபால், நோனி, பல்லேல், மொய்ராங் ஆகிய நான்கு இடங்களில் இமா (மகளிர்) சந்தைகள் , இம்பாலில் இம்பால் நதியின் மேற்கு நதி முகப்பு பகுதி 2 மேம்பாடு, நோனி மாவட்டத்தில் இம்பால்-ஜிரிபாம் தேசிய நெடுஞ்சாலை 38 இல் இராங் நதியின் மீது 4 வழி பாலம் கட்டுமானம் ஆகியவை அடங்கும்.
Also Read: அமித் ஷா குறித்த அவதூறு வழக்கு! ராகுல் காந்திக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஜாமீன்..!
இதற்கிடையில் பிரதமரின் மணிப்பூர் பயணத்தை ராகுல் காந்தி வரவேற்றுள்ளார். அங்கு பிரச்சினை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் வசிக்கும் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே கலவரம் வெடித்தது. இதில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மணிப்பூர் கலவரம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் மட்டும் உரையாற்றினார். இப்படியான நிலையில் அவரின் மணிப்பூர் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.