AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்..! விக்ரம் 1 ஏவுகணை குறித்து பிரதமர் மோடி வாழ்த்து

இந்தியாவின் விண்வெளித் துறையில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்  நிறுவனம் உருவாக்கிய விக்ரம்-1ஏவுகணையின் முதல் சுற்றுப்பாதை ஏவுதல் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் .

இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம்..! விக்ரம் 1 ஏவுகணை குறித்து பிரதமர் மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Jul 2026 17:50 PM IST

 

இந்தியாவின் விண்வெளித் துறையில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்  நிறுவனம் உருவாக்கிய விக்ரம்-1ஏவுகணையின் முதல் சுற்றுப்பாதை ஏவுதல் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், “இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க புதிய அத்தியாயம். இந்தியாவின் முதல் தனியார் முறையில் உருவாக்கப்பட்ட சுற்றுப்பாதை ஏவுகணையான விக்ரம்-1 இன்று தனது முதல் ஏவுதலை மேற்கொள்ள உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் 1 ஏவுகணை குறித்து பிரதமர் மோடி வாழ்த்து

 

நான்கு கட்டங்களைக் கொண்ட விக்ரம்-1 ராக்கெட், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப குறுகிய காலத்திலேயே செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் தனியார் விண்வெளி சேவை உலகளாவிய அளவில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கைரூட் விஞ்ஞானிகளுடன் பேசிய பிரதமர் மோடி

 

 

View this post on Instagram

 

A post shared by Narendra Modi (@narendramodi)

இந்த முயற்சி இந்திய இளைஞர்களின் திறமை, உறுதி மற்றும் தொழில்முனைவு மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகவும், மத்திய அரசின் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் புதுமை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதற்கான சான்றாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Follow Us