எமனாக மாறிய இன்ஸ்டா காதல்.. முந்திரி தோப்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன்.. பகீர் பின்னணி!
Teen's Instagram Love Turns Tragic | ஒடிசாவை சேர்ந்த 17 வயது சிறுமி இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியை தனியாக அழைத்துச் சென்ற அந்த இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மாதிரி புகைப்படம்
புவனேஷ்வர், செப்டம்பர் 21 : ஒடிசாவில் (Odisha) இன்ஸ்டாகிராமில் (Instagram) காதலித்த இளைஞருடன் சென்ற சிறுமியை அந்த இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என அந்த இளைஞர் மிரட்டிய நிலையில், பயத்தில் சிறுமி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த நிலையில், சிறுமியை மீட்ட பெற்றோர் அவரிடம் விசாரணை நடத்தியபோது இந்த திடுக்கிடும் சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டா காதலனை நம்பிச் சென்ற 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்
ஒடிசா மாநிலம் கொண்டரபரா மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில், சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஜிண்டு ஜினா என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், செப்டம்பர் 10, 2025 அன்று ஜிண்டு ஜினா சிறுமியை பார்க்க அவரது கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து சிறுமியை அவர் பைக்கில் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். அப்போது அவரின் தாயார் சிறுமியை உடனடியாக அவரது வீட்டில் விட்டுவிடும்படி கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ‘எனக்கு 6 பானிபூரி வேணும்’ நடுரோட்டில் தர்ணாவில் ஈடுபட்ட பெண்.. திணறிய போலீஸ்!
சிறுமியை முந்திரி தோப்புக்கு அழைத்துச் சென்ற இளைஞர்
சிறுமியை தனது கிராமத்திற்கு அழைத்துச் செல்வதாக அழைத்துக்கொண்டு வந்த இளைஞர், சிறுமியை முந்திரி தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நிலையில், அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் அவர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்துப்போன அந்த சிறுமி தனது வீட்டிற்கு சென்றதும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த நிலையில், சிறுமியை மீட்ட அவரது பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க : மதுபோதையில் பாம்பின் தலையை கடித்த நபர்.. அடுத்து நேர்ந்த விபரீதம்!
மன உளைச்சல் காரணமாக தற்கொலைக்கு முயன்ற சிறுமி
சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில், அவர் தனக்கு நடந்த கொடூரம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனை கேட்டு அதிர்ந்துப்போன பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலனே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.