Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பேருந்து நிலையத்தில் குழந்தையை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற தாய்.. காட்டி கொடுத்த சிசிடிவி!

Mom Abandons 15 Month Old Child | ஐதராபாத்தை சேர்ந்த நவீனா என்ற பெண் இன்ஸ்டாகிராமில் சந்தித்த தனது காதலனுடன் செல்வதற்காக தனது 15 மாதங்களே ஆன ஆண் குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு சென்றுள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் குழந்தையை தவிக்க விட்டு காதலனுடன் சென்ற தாய்.. காட்டி கொடுத்த சிசிடிவி!
வைரல் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 28 Jul 2025 19:33 PM

நால்கொண்டா, ஜூலை 28 : தெலங்கானாவில் (Telangana) இன்ஸ்டாகிராமில்  சந்தித்த காதலனுக்காக இளம் பெண் ஒருவர் தனது 15 மாத ஆண் குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து நிலையத்தில் குழந்தை தனியாக அழுதுக்கொண்டு இருப்பதை கண்ட அதிகாரிகள், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்தபோது குழந்தையின் தாய் அந்த குழந்தையை விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக குழந்தையின் தாய், அவரது காதலன் மற்றும் குழந்தையின் தந்தை ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

15 மாத குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டு சென்ற தாய்

ஐதராபாத்தை சேர்ந்த நவீனா என்ற பெண் தனது 15 மாத ஆண் குழந்தை தனுஷை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு விட்டு, தனது காதலுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பேருந்து நிலையத்தில் குழந்தை அழுது கொண்டிருந்த நிலையில், குழந்தையை கண்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தின் சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் நவீனா இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த நபருடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும் இன்ஸ்டாகிராமில் தான் சந்தித்த அந்த நபருடன் செல்வதற்காக அவர் தனது கணவன் மற்றும் குழந்தையை விட்டு செல்ல முடிவு செய்து இந்த செயலை செய்துள்ளதும் போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : ஹரித்வார் கோயிலில் கூட்ட நெரிசல்.. பக்தர்கள் 6 பேர் உயிரிழப்பு… 50 பேர் காயம்!

சிசிடிவி காட்சி அடிப்படையில் சிக்கிய தாய்

பேருந்து நிலையத்தில் கைப்பற்றப்பட்ட அந்த சிசிடிவி காட்சியில் நவீனா தனது மகனை விட்டு செல்வதும், குழந்தை அழுது கொண்டு வந்த நிலையில் அதனை அதிகாரிகள் மீட்பது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சிசிடிவி காட்சியை அந்த குழந்தையிடம் காட்டிய போது அந்த குழந்தை அம்மா என அழைத்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்து அதிகாரிகளை சங்கடத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில், சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த அந்த வாகனத்தின் எண்ணை வைத்து போலீசார் தங்களது விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது நவீனாவின் காதலர் அந்த இருசக்கர வாகனத்தை தனது நண்பரிடம் இருந்து கடன் வாங்கி வந்தது தெரிய வந்துள்ளது.

இதையும் படிங்க : பிரேக் பிடிக்காத கண்டெய்னர் லாரி.. அடுத்தடுத்து மோதி நொறுங்கிய 20 வாகனங்கள்.. ஒருவர் பலி!

இந்த நிலையில் குழந்தையின் தாய், அவரது காதலன் மற்றும் குழந்தையின் தந்தை ஆகியோரை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.