AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொல்கத்தா துர்கா பூஜையில் கூட்ட நெரிசல்… 17 பேர் உயிரிழந்ததாக தகவல், 35க்கும் மேற்பட்டோர் காயம்!

Kolkata Durga Puja Pandal Stampede : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மழைக்கு நடுவே அதிகப்படியான கூட்டம் திரண்டதே இதற்குக் காரணம் என காவல்துறை கூறியுள்ளது. கூட்ட நெரிசலின் அழுத்தத்தால் பந்தலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா துர்கா பூஜையில் கூட்ட நெரிசல்… 17 பேர் உயிரிழந்ததாக தகவல், 35க்கும் மேற்பட்டோர் காயம்!
கொல்கத்தா துர்கா பூஜையில் கூட்ட நெரிசல்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Oct 2026 23:09 PM IST

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் (Kolkata) துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 17 பேர் உயிரிழந்ததாகவும், 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் துர்கா பூஜை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சோர்பாகன் சர்போஜனின் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 17 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தா துர்கா பூஜையில் கூட்ட நெரிசல்… 17 பேர் மரணம்

சப்தமி நாளான அக்டோபர் 17, 2026 இன்று மாலை, சோர்பாகன் பந்தலில் அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். கிரிஷ் பார்க் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாரதா பார்க் பந்தலின் வெளியேறும் வாயிலில், இரவு சுமார் 7.40 மணியளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது. மழைக்கு நடுவே அதிகப்படியான கூட்டம் திரண்டதே இதற்குக் காரணம் என காவல்துறை கூறியுள்ளது. கூட்ட நெரிசலின் அழுத்தத்தால் பந்தலின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : தமிழகம் உள்பட 17 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம்! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

கொல்கத்தா மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அக்டோபர் 17, 2026 இன்று பிற்பகல் முதலே கனமழை பெய்தது. இருப்பினும், குடைகளுடன் பக்தர்கள் பந்தல்களுக்குச் செல்வதைத் தொடர்ந்தனர். பிற்பகலில் சற்று ஓய்ந்த மழை, மாலையில் மீண்டும் தீவிரமடைந்தது. மழையைப் பொருட்படுத்தாமல் நகரெங்கும் பந்தல்களில் கூட்டம் அலைமோதிய நிலையில்தான், சோர்பாகன் பந்தலில் இந்தத் துயரம் நிகழ்ந்தது.

கடும் நெரிசலில் சிக்கிப் பலர் மயங்கி விழுந்ததாகவும், அவர்களில் சிலரை இருசக்கர வாகனங்களிலேயே தூக்கிச் சென்றதாகவும் நேரில் பார்த்த ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். பந்தலின் நுழைவு, வெளியேறும் வாயில்கள் இரண்டுமே மிகக் குறுகலாக இருந்ததாகவும், அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை என்றும் மற்றொருவர் குற்றம் சாட்டினார். தனது மகளும் பேத்தியும் இந்தச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தகவலறிந்ததும் காவல் கட்டுப்பாட்டு அறை, தீயணைப்புத் துறை, பேரிடர் மேலாண்மைக் குழு, மருத்துவக் குழுக்களுடன் கூடிய ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. பூஜைக் குழு நிர்வாகிகளும் மீட்புப் பணிகளில் உதவியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, கல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் படிக்க : உங்கள் வீட்டில் இலவச மின்சாரம் வேண்டுமா? பிஎம் சூர்யா கர் திட்டத்தின் செலவு மற்றும் மானிய விபரங்கள்!

சுமார் 35 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், பந்தல் பார்வையாளர்களுக்காக மூடப்பட்டுள்ளதாகவும் கொல்கத்தா காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் இந்த விபத்து தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Follow Us