AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கூகுள் மேப் பார்த்து பயணம் செய்த குடும்பம்.. கழிவூர் கால்வாயில் சிக்கிய கார்.. 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

Family Stuck With Car In Roadside Drainage | உத்தர பிரதேசத்தில் குடும்பம் ஒன்று கூகுள் மேப் உதவியுடன் காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த கார் சாலையோர கழிவுநீர் கால்வாயில் சிக்கிய நிலையில், 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடும்பத்தினர் மீட்கப்பட்டுள்ளனர்.

கூகுள் மேப் பார்த்து பயணம் செய்த குடும்பம்.. கழிவூர் கால்வாயில் சிக்கிய கார்.. 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Jun 2026 22:49 PM IST

ஹாப்பூர், ஜூன் 15 : உத்தர பிரதேசத்தில் (UP – Uttar Pradesh) குடும்பம் ஒன்று கூகுள் மேப் (Google Map) உதவியுடன் காரில் பயணம் செய்துக்கொண்டு இருந்த நிலையில், கார் கழிவுநீர் கால்வாயில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில், சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரில் சிக்கொண்டு இருந்த குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

உபியில் கூகுள் மேப் உதவியுடன் காரில் பயணம் செய்த குடும்பம்

உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியை சேர்ந்தவர் சாஹில். இவர் தன்னுடைய குடும்பத்தினர் உடன் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுக்கொண்டு இருந்துள்ளார். தாத்ரி பகுதியில் இருந்து உறவினர் இருக்கும் பகுதியான கித்தோர் நகருக்கு கூகுள் மேப் போட்டு அவர் பயணம் செய்துள்ளார்.

இதையும் படிங்க : நிபா வைரஸ் பரவல்.. கேரளம் – தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு!

பராமரிப்பு பணிகள் காரணமாக டெல்லியின் பதக் மேம்பாலம் அருகே உள்ள சாலை மூடப்பட்டு இருந்துள்ளது. இதன் காரணமாக கூகுள் மேப் மாற்று வழியை காட்டியுள்ளது. எனவே அவர்களும் அந்த வழியை பின்பற்றி சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஹாப்பூர் மாவட்டத்தில் ஆனந்த் விஹார் என்ற பகுதி அருகே சென்றபோது சாலையில் நீர் தேங்கி இருந்துள்ளது.

சாலையோர சாக்கடையில் சிக்கிக்கொண்ட கார்

சாலையில் நீர் தேங்கியிருந்ததை கண்டுக்கொள்ளாமல் சாஹில் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரம் உள்ள சாக்கடையின் ஆழமான பகுதியில் கார் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் அந்த குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். கார் சாக்கடையில் சிக்கிக்கொண்ட நிலையில், கதவுகளை திறக்க முடியாத அளவு பழுது ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மனிதர்கள் தவறு.. அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல்.. கொளுத்தப்போகுது வெயில்!

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் தவித்துள்ளனர். இந்த நிலையில் தான், அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் 2 மணி நேரம் போராடி அவர்கள் அனைவரையும் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us