பொருட்காட்சியில் அறுந்து விழுந்த ராட்சத ராட்டினம்.. ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.. திடுக் வீடியோ!!

தொடர்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் அந்த ராட்டினம் பயங்கர சத்தத்துடன் அறுந்து தரையில் விழுந்தது. இதில் ராட்டினத்தில் இருந்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். மேலும், ராட்டினத்தின் கீழே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் சிக்கினார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொருட்காட்சியில் அறுந்து விழுந்த ராட்சத ராட்டினம்.. ஒருவர் பலி, 13 பேர் படுகாயம்.. திடுக் வீடியோ!!

அறுந்து விழுந்த ராட்சத ராட்டினம்

Updated On: 

08 Feb 2026 08:43 AM

 IST

ஹரியானா, பிப்ரவரி 08: ஹரியானாவின் பரிதாபத் அருகே சுரஜ்குண்ட் நகரில் சர்வதேச கைவினை பொருட்கள் மற்றும் கலைக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியில் கண்களை கவரும் அரங்குகள், தின்பண்டங்கள் அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. மேலும் குழந்தைகளை கவருவதற்கான கண்காட்சியில் குடை ராட்டினம், தொட்டில் ராட்டினம், ராட்சத ராட்டினம் என பலவிதமான ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று வார இறுதி என்பதால் பொழுதுபோக்கிற்காக சுற்றுவட்டாரத்தில் இருந்தவர்கள் மாலை முதல் அங்கு தங்களுடைய குழந்தைகளுடன் அதிகளவில் திரண்டிருந்தனர். இதனால் கண்காட்சியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் பல்வேறு குழுக்களாக குவிக்கப்பட்டிருந்தனர்.

இதையும் படிங்க: உச்சக்கட்ட கோபத்தில் சூரியன்…இந்தியாவின் செயற்கைகோள்-சிக்னல்கள் பாதிக்க வாய்ப்பு…இஸ்ரோ எச்சரிக்கை!

ராட்டினத்தில் திடீரென கோளாறு:

அங்கு சிறுவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் ராட்சத தொட்டில் ராட்டினம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சிறுவர்கள், ஆடவர்கள் உள்ளிட்ட பலர் ஏறி விளையாடி மகிழ்ந்தனர். மாலை 6 மணியளவில் அந்த ராட்டினத்தில் 15 பேர் சவாரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த ராட்டினத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அதில் இருந்த சிறுவர் – சிறுமியர் உட்பட அனைவரும் பயத்தில் அலறி துடித்தனர்.

அறுந்து விழுந்த ராட்சத ராட்டினம்:

தொடர்ந்து, கண் இமைக்கும் நேரத்தில் அந்த ராட்டினம் பயங்கர சத்தத்துடன் அறுந்து தரையில் விழுந்தது. இதில் ராட்டினத்தில் இருந்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். மேலும், ராட்டினத்தின் கீழே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் ஒருவர் சிக்கினார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதேபோல், விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் உட்பட 13 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: மேகாலயா சுரங்க வெடிவிபத்து.. பிப்.9 ஆம் தேதி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

உடனே வெளியேற்றப்பட்ட மக்கள்:

இதனிடையே, ராட்டினம் சரிந்து விழுந்த சிறிது நேரத்திலேயே, கண்காட்சியில் இருந்து அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டு, மூடப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்ஹா, ​​மற்ற முகமைகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை முன்னின்று நடத்தினார் மற்றும் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு மாற்றுவதை மேற்பார்வையிட்டார். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மோடிஜி என் சகோதரனை மீட்டுத்தாருங்கள் - நடிகை ஜெலினா ஜெட்லி கண்ணீர் மல்க உருக்கம்
சற்றே உயர்ந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
ஈரானை உடனே விட்டு வெளியேறுங்கள் – அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை
சிரஞ்சீவி - மோகன்லாலின் மெகா கூட்டணி இணையும் படம் - வெளியான அப்டேட்