Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிபிஐ சோதனையில் ஷாக்.. வீட்டில் 3.5 கிலோ தங்கம்.. கட்டுக்கட்டாக பணம்.. டெல்லியை அதிரவைத்த சம்பவம்!

IRS Officer premises Raid : டெல்லியைச் சேர்ந்த வருவாய் துறை அதிகாரிக்கு சொந்த இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.1 கோடி ரொக்கம், ரூ.3.5 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. லஞ்சம் பெற்ற புகாரில் கைதான வருவாய் துறை அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்தியதில், இவை பறிமுதல் செய்யப்பட்டன.

சிபிஐ சோதனையில் ஷாக்.. வீட்டில் 3.5 கிலோ தங்கம்.. கட்டுக்கட்டாக பணம்.. டெல்லியை அதிரவைத்த சம்பவம்!
பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம், நகைகள்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 03 Jun 2025 10:03 AM

டெல்லி, ஜூன் 03 : டெல்லியைச் சேர்ந்த வருவாய் துறை அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனயில் (IRS Officer premises Raid) ரூ.1 கோடி பணம்,  ரூ.3.5 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. டெல்லி, மும்பை, பஞ்சாபில் உள்ள நடந்த சோதனையில் இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. டெல்லியைச் சேர்ந்தவர் வருவாய் துறை அதிகாரி அமித் குமார். இவர் 2007ஆம் ஆண்டு முதல் வருவாய் துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். டெல்லியில் உள்ள வரி செலுத்துவோர் சேவைகள் இயக்குநரகத்தில் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பணிபுரிந்து வருகிறார். அமித் குமார் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் அமித் குமாரை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 2025 மே 31ஆம் தேதி கைது  (Delhi IRS officer arrest) செய்தனர்.

வருவாய் துறை அதிகாரி கைது

சிபிஐ அதிகாரிகள் அளித்த தகவலின்படி, வருவாய் துறை அதிகாரி அமித் குமார், மொஹாலியில் உள்ள அவரது இல்லத்தில் ரூ.25 லட்சம் பணம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். பின்னர் அவர் டெல்லியின் வசந்த் குஞ்சில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.

அதாவது, லா பீசோஸ் பீட்சா கடை உரிமையாளர் சனம் கபூருக்கு ரூ.45 லட்சம் செலுத்த கோரி வருமான வரி நோட்டீஸ் னுப்பப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் சனம் கபூருக்கு சாதகமாக முடிவு எடுக்க, அவரிடம் லஞ்சம் கேட்டிருக்கிறார் வருவாய் துறை அதிகாரி அமித் குமார்.

முதற்கட்டமாக ரூ.25 லட்சம் தர வேண்டும் என கேட்டிருக்கிறார். லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் கடுமையான தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அவர் சனம் கபூரை மிரட்டி இருக்கிறார். இதனை அடுத்து, அவர் முதற்கட்டமாக ரூ.25 லட்சத்தை கொடுத்து இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.

ரூ.1 கோடி ரொக்கம், தங்கம், வெள்ளி பறிமுதல்


இதனை அடுத்து தான், வருவாய் துறை அதிகாரி அமித் குமார் சங்காலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதனை அடுத்து அமித் குமாருக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லி, மும்பை மற்றும் பஞ்சாபில் அவருக்கு சொந்த இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்ததில், ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதோடு, ரூ.3.5 கோடி மதிப்புள்ள தங்கம் வெள்ளி நாணயங்கள் பிறமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, 3.5 கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளி, ரூ.1 கோடி ரொக்கத்தை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து, அமித் குமாருக்கு 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டது. அவரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.