Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா – என்ன நடக்கிறது குஜராத்தில்?

Gujarat Assembly : முதல்வர் பூபேந்திர படேல் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, புதிய அமைச்சர்கள் அக்டோபர் 17, 2025 அன்று பதவியேற்பார்கள். இதற்காக அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த நடவடிக்கை புதிய அமைச்சரவை அமைப்பதற்கு வழி வகுக்கும்.

அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு ராஜினாமா – என்ன நடக்கிறது குஜராத்தில்?
பூபேந்திர படேல்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 16 Oct 2025 17:53 PM IST

குஜராத்  (Gujarat) அரசியலில் இருந்து தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தற்போதைய குஜராத்தில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமாக்களை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளனர். இது புதிய அமைச்சரவை அமைப்பதற்கு வழி வகுக்கும். புதிய அமைச்சரவைக்கான பதவியேற்பு விழா அக்டோபர் 17, 2025 அன்று குஜராத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து நீக்கப்பட வேண்டிய அமைச்சர்களின் ராஜினாமா கடிதங்களை முதல்வர் பூபேந்திர படேல் (Bhupendra Patel )அக்டோபர் 16, 2025 இன்றிரவு தாமதமாக ஆளுநரிடம் சமர்ப்பிப்பார் என கூறப்படுகிறது. மேலும், அதனுடன் பதவியேற்கவுள்ள புதிய அமைச்சர்களின் பெயர்களின் பட்டியலும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான அமைச்சரவை அக்டோபர் 17, 2025 அன்று வெள்ளிக்கிழமை விரிவுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மூலம் குஜராத்தில் சுமார் 10 புதிய அமைச்சர்களைப் பெறலாம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் முன்பு கணித்திருந்தார். மேலும், குஜராத் அமைச்சரவையில் தற்போதைய அமைச்சர்களில் பாதி பேர் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : ’ நான் சொல்வதை திரித்து சொல்லி, அரசியல் செய்யாதீர்கள் ‘ – முதலமைச்சர் மம்தா பானர்ஜி விளக்கம்..

முதல்வர் உட்பட 17 அமைச்சர்கள்

இந்த முக்கிய அரசியல் மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கையில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவை அக்டோபர் 17, 2025 வெள்ளிக்கிழமை காலை 11:30 மணிக்கு விரிவாக்கப்படும் என்று கூறப்பட்டது. தற்போதைய குஜராத் அமைச்சரவையில் முதல்வர் உட்பட 17 அமைச்சர்கள், எட்டு கேபினட் அமைச்சர்கள் மற்றும் சம எண்ணிக்கையிலான இணை அமைச்சர்கள் உள்ளனர். 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில், அமைச்சர்களின் எண்ணிக்கை, 27 அல்லது அவையின் மொத்த பலத்தில் 15 சதவீதத்தைக் குறிக்கிறது.

அடுத்து என்ன நடக்கும்?

தற்போதைய அமைச்சர்கள் ராஜினாமா செய்த பிறகு, அமைச்சர்களாக பதவியேற்கும் எம்எல்ஏக்கள் குறித்த அறிவிப்பு இன்றிரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த மூன்று முதல் நான்கு எம்எல்ஏக்கள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. புதிய அமைச்சர்களில் பெரும்பாலோர் பாஜகவைச் சேர்ந்தவர்கள். சாதி ரீதியிலாக அமைச்சர்களின் பெயர்கள் கவனமாக பரிசீலிக்கப்படும், அதே நேரத்தில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் பரிசீலிக்கப்படும். ஒட்டுமொத்தமாக, புதிய அமைச்சரவை இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : Suresh Gopi: வருமானம் குறையுது.. அமைச்சர் பதவி வேண்டாம்.. சுரேஷ்கோபி முடிவு!

புதிய அமைச்சரவையில் இடம்பெறப்போவது யார்?

தகவல்களின்படி, ரிவாபா ஜடேஜா, அர்ஜுன் மோட்வாடியா, ஜிது வகானி மற்றும் ஹர்ஷ் சங்வி ஆகியோர் இந்த முறை அமைச்சரவையில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.  கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு குஜராத்தில் நடைபெறும் முதல் அமைச்சரவை மாற்றம் இதுவாகும். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு முதல்வர் படேல் தலைமையிலான இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகிறது.  வருகிற 2027 ஆம் ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான அனைத்து சமன்பாடுகளையும் சமநிலைப்படுத்த அரசாங்கம் இப்போது மறுசீரமைப்பை செயல்படுத்துவதன் மூலம் முயற்சிக்கிறது.