பருப்பு வகைகளின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முயற்சி.. இரண்டு திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..
PM Modi On Pulse Production: பிரதம மந்திரி தன்-தானய யோஜனா மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம் ஆகியவற்றை பிரதமர் மோடி நாளை (அக்டோபர் 11, 2025) அன்று தொடங்கி வைக்கிறார். ஒரு நாடு, ஒரு விவசாயம், ஒரு குழு' என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் செயல்படும்.

அக்டோபர் 10, 2025: 2030-31 ஆம் ஆண்டுக்குள் பருப்பு சாகுபடியை 27.5 மில்லியனிலிருந்து 31 மில்லியன் ஹெக்டேராக விரிவுபடுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (அக்டோபர் 11, 2025) இரண்டு முயற்சிகளை – பிரதம மந்திரி தன்-தானய யோஜனா மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவு இயக்கம் – தொடங்கி வைப்பார். இரண்டு திட்டங்களும் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், முன்மொழியப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பருப்பு வகைகளை மையம் கொள்முதல் செய்யும் என்றார். இந்த இரண்டு திட்டங்களைத் தவிர, விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்தும் துறைகளில் ரூ. 42,000 கோடி மதிப்புள்ள 1,100க்கும் மேற்பட்ட திட்டங்களும் அக்டோபர் 11, 2025 அன்று தொடங்கி வைக்கப்படும்.
மேலும், ” இன்று, இந்தியா கோதுமை மற்றும் அரிசியில் முற்றிலும் தன்னிறைவு பெற்றுள்ளது, மேலும் நாங்கள் நான்கு கோடி டன்களுக்கும் அதிகமான விவசாய விளைபொருட்களை ஏற்றுமதி செய்துள்ளோம். இருப்பினும், பருப்பு வகைகளைப் பொறுத்தவரை, நாம் இன்னும் ஈடுகட்ட வேண்டிய நிலை உள்ளது,” என குறிப்பிட்டு பேசினார்.
மேலும் படிக்க: இறக்குமதி செலவு கம்மி.. வேலைவாய்ப்பு அதிகம் – பிரதமர் மோடி சொன்ன பாசிட்டிவ் விஷயங்கள்!
பருப்பு சாகுபடியில் மிகப்பெரிய பங்கு:
“மொத்த பருப்பு சாகுபடி பரப்பளவை 27.5 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 31 மில்லியன் ஹெக்டேராக 2030-31 ஆம் ஆண்டுக்குள் விரிவுபடுத்துவதும், உற்பத்தியை 24.2 மில்லியன் டன்னிலிருந்து 35 மில்லியன் டன்னாக உயர்த்துவதும் இதன் நோக்கமாகும். உற்பத்தித்திறனை ஹெக்டேருக்கு 880 கிலோவிலிருந்து ஹெக்டேருக்கு 1,130 கிலோவாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார். அத்தோடு, உயர்தர விதைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
ரூ. 25 லட்சம் மாணியம் வழங்கப்படும்:
தொடர்ந்து பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “ விவசாயிகளுக்கு சிறந்த விலையை உறுதி செய்வதற்கும் உள்ளூர் மதிப்பு கூட்டலை ஊக்குவிப்பதற்கும் பருப்பு வகைகள் வளரும் பகுதிகளில் 1,000 பதப்படுத்தும் அலகுகள் நிறுவப்படும். ஒவ்வொரு அலகுக்கும் ரூ. 25 லட்சம் அரசு மானியம் கிடைக்கும். முழு விவசாய இயந்திரங்களும் – மாநில அரசுகளுடன் இணைந்து – ‘ஒரு நாடு, ஒரு விவசாயம், ஒரு குழு’ என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் செயல்படும்.
மேலும் படிக்க: இந்திய விமானப்படை தின விருந்து… ராவல்பிண்டி சிக்கன் டிக்கா முதல் பாலகோட் திராமிசு வரை… பாகிஸ்தானை கலாய்த்த இந்திய விமானப்படை
நீர்ப்பாசனப் பரப்பை மேம்படுத்துதல், சேமிப்பு வசதிகளை வலுப்படுத்துதல், கடன் அணுகலை விரிவுபடுத்துதல் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இந்த முயற்சிகள் கவனம் செலுத்தும்” என தெரிவித்துள்ளார்.