இந்திய விமானப்படை தின விருந்து… ராவல்பிண்டி சிக்கன் டிக்கா முதல் பாலகோட் திராமிசு வரை… பாகிஸ்தானை கலாய்த்த இந்திய விமானப்படை
Air Force Day : இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக விமானப்படை வீரர்களுக்கு அக்டோபர் 9, 2025 சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் உணவுகளுக்கு பாகிஸ்தானின் நகரங்களின் பெயர்கள் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

புதுடெல்லி, அக்போடபர் 9 : இந்திய விமானப்படை (Airforce) தனது 93-ஆவது ஆண்டு விழாவை அக்டோபர் 8, 2025 அன்று பிரமாண்டமாகக் கொண்டாடியது. இந்த நிலையில் இந்த ஆண்டு இந்திய விமானப்படையின் விருந்து மெனு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இந்திய விமானப்படையின் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்திய அந்த விருந்து மெனு, பாகிஸ்தானைக் கலாய்க்கும் வகையில் அந்த நாட்டில் உள்ள நகரங்களின் பெயரை குறிப்பிட்ட உணவுகளால் நிரம்பியிருந்தது. இது ஒரு பக்கம் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும் மற்றொரு பக்கம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இவை ஆபரேசன் சிந்தூர் மூலம் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வான்வெளியில் மட்டும் மல்ல, விருந்து மூலமும் தாக்குதல்
இந்திய விமானப்படை 93 வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்தியா விமானப்படையினருக்கு சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் விருந்து மெனுவில் உணவுகளின் பெயர்களுக்கு பாகிஸ்தானின் நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. விருநது மெனுவில் இடம்பெற்றிருந்த உணவுகள் இதோ
இதையும் படிக்க : பீகார் சட்டப்பேரவை தேர்தல் எப்போது? இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!
- ராவல்பிண்டி சிக்கன் டிக்கா மசாலா
- ரஃபிகியூ மட்டன்
- போலாரி பனீர் மேத்தி மலாய்
- சுக்குர் ஷாம் சேவேரா கோஃப்தா
- சர்கோதா டால் மக்காணி
- ஜேக்கபாபாத் மேவா புலாவ்
- பஹவல்பூர் நான்
இவை அனைத்தும் இந்தியா முன்னர் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் குறிவைக்கப்பட்ட பாகிஸ்தான் இடங்களின் பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உணவுகளுக்கு பாகிஸ்தான் பெயர்கள்
Indian Air Force Day Menu 🫡
Jai Hind 🇮🇳@IAF_MCC pic.twitter.com/Z9Evsm3Q61
— KJS DHILLON🇮🇳 (@TinyDhillon) October 9, 2025
இனிப்பு மூலமும் தாக்குதல்
மெனுவில் இனிப்பு பகுதியிலும் இந்தியா விமானப்படை தனது தாக்குதலை தொடுத்தது. குறிப்பாக அதில் இருந்த பாலகோட் திரமிசு, முஃபாசராபாத் குல்ஃபி ஃபலூடா, முரிட்கே மீதா பான் என இனிப்புகளிலும் பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன. இவை எல்லாம் இந்தியா நடத்திய பாலகோட் ஏர் ஸ்டிரைக் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் எனப்படும் தாக்குதல்களின் போது பாகிஸ்தானில் இந்தியா குறிவைத்த நகரங்களின் பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : பீகார் தேர்தல் – 17 திருத்தங்களை அறிவித்த தேர்தல் ஆணையம்
ஆபரேசன் சிந்தூரில் 9 தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல்
இந்த ஆண்டு மே 7, 2025 அன்று இந்திய விமானப்படை ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள முரிட்கே, பஹவல்பூர் உள்ளிட்ட லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகங்கள் உட்பட ஒன்பது தீவிரவாத தளங்களை அழித்தது. அதே போல கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாலகோட் ஏர் ஸ்டிரைக் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 இந்திய வீரர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்தது. இந்தியா வான்வெளியில் மட்டுமல்லாமல் உணவு மெனு மூலமாகவும் பதிலடி கொடுக்கும் என்பதை இந்திய விமானப்படை அழுத்தமாக நிரூபித்திருக்கிறது.