’இந்திரா காந்தி செய்தது பெரிய தப்பு.. அதனால உயிரே போச்சு’ ப.சிதம்பரம் பகீர் பேச்சு
P Chidambaram On Operation Blue Star : ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் இந்திரா காந்தி ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு தவறு என்றும் ராணுவ நடவடிக்கை இந்திரா காந்தியின் உயிரேயே பறித்துவிட்டது என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இவரது பேச்சு காங்கிரஸ் கட்சியில் பெரும் சலசலப்பை கிளப்பியுள்ளது.

டெல்லி, அக்டோபர் 12 : அமிர்தசரஸில் ஆபரேஷன் ப்ளு ஸ்டார் என்ற பெயரில் இந்திரா காந்தி ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது பெரிய தவறு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும், ராணுவ நடவடிக்கை தான் இந்திரா காந்தியின் உயிரையே பறித்துவிட்டதாகவும் ப.சிதம்பரம் பேசியுள்ளார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்பது ஜூன் 1984 இல் இந்திய ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கையாகும். சீக்கியர்களின் புனித தலமாக கருதப்படும் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இருந்து பிந்த்ரன்வாலே தலைமையிலான சீக்கிய பயங்கரவாதிகளை வெளியேற்ற 1984ஆம் ஆண்டு அப்போதையே பிரதமர் இந்திரா காந்தி ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரை கையில் எடுத்தார். 1984ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரை ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடந்தது. இந்த கோயிலில் ராணுவத்தை இந்திரா காந்தி இறக்கினார். இதனால், பொதுமக்கள், ராணுவத்தினர் என பலரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்ட்டார். அக்டோபர் 31, 1984 அன்று, பொற்கோயில் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக இந்திரா காந்தி சீக்கியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனை பற்றி தான் தற்போது காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.. இது காங்கிரஸில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் நடந்த விழாவில் பேசிய ப.சிதம்பரம், “ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் மிகப்பெரிய தவறு.
Also Read : அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்?
’இந்திரா காந்தி செய்தது பெரிய தப்பு’
VIDEO | Senior Congress leader and former Home Minister P Chidambaram says, “No disrespect to any military officers here but that (Blue Star) was a wrong way to retrieve the Golden Temple. Few years later, we showed the right way to retrieve the Golden Temple by keeping out the… pic.twitter.com/ZuA87mbxYO
— Press Trust of India (@PTI_News) October 12, 2025
அந்தத் தவறுக்காக இந்திரா காந்தி. இந்த முடிவு அப்போதைய பிரதமரின் ஒரே முடிவு அல்ல. ராணுவம், காவல்துறை, உளவுத்துறை என ஒட்டுமொத்த துறையின் முடிவாகும். அதற்கு பிறகு தான் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதற்கு இந்திரா காந்தி மீது பழி சுமத்தப்படுகிறது. இது தவறு. நான் எந்த இராணுவ அதிகாரியையும் அவமதிக்கவில்லை.
இன்று பஞ்சாபிலிருந்து காலிஸ்தான் முற்றிலுமாக மறைந்துவிட்டது. இந்தக் கோரிக்கையும் முழக்கமும் கிட்டத்தட்ட மறைந்துவிட்டன. இருப்பினும், இங்குள்ள உண்மையான பிரச்சனை பொருளாதாரம். மக்கள் பஞ்சாபை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிக்கின்றனர்” என்று கூறினார்.