Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Milk Veg or Non Veg: பால் சைவமா..? அசைவமா..? சைவ உணவர்கள் பாலை ஏன் அசைவமாக பார்க்கிறார்கள்..?

Milk Products: வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்கள் சுற்றுச்சூழலுக்கோ அல்லது விலங்குகளுக்கோ தீங்கு விளைவிக்கும் எதையும் சாப்பிட விரும்பமாட்டார்கள். இதன்காரணமாக, இறைச்சி மற்றும் கடல் உணவு தவிர்ப்பதோடு, பால் மற்றும் தயிரை கூட அசைவமாக கருதுகிறார்கள். அதன்படி பால், தயிர், தேன், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளையும் அசைவ உணவுகளாக பார்க்கிறார்கள்.

Milk Veg or Non Veg: பால் சைவமா..? அசைவமா..? சைவ உணவர்கள் பாலை ஏன் அசைவமாக பார்க்கிறார்கள்..?
பால் மற்றும் பால் பொருட்கள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Apr 2025 17:20 PM IST

உலகம் முழுவதும் சமீப காலமாக வீகன்ஸ் (Vegans) என்று அழைக்கப்படும் சைவ உணவு முறை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கூட ஏராளமானவர்கள் இந்த உணவு முறையை பின்பற்ற தொடங்கிவிட்டார்கள். சைவ உணவு முறை என்பது இறைச்சி, முட்டைகள் மட்டுமல்லாது, பால் (Milk), தயிர், நெய், வெண்ணெய், சீஸ் போன்ற அனைத்து வகையாக பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களையும் ஒதுக்குகிறார்கள். மேலும் சில தேனை கூட எடுத்துகொள்வதுகிடையாது. இவர்கள் எப்போதும் தானியங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் போன்றவைகளை மட்டுமே உணவாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்தநிலையில், சைவ உணவு (Veg) முறையை பின்பற்றுபவர்கள் ஏன் பாலை அசைவமாக கருதுகிறார்கள் என்ற கேள்வி வருகிறது. அதற்கான விடையை இங்கே தெரிந்துகொள்வோம்.

சைவ உணவு முறையின் அர்த்தம் என்ன..?

வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்கள் சுற்றுச்சூழலுக்கோ அல்லது விலங்குகளுக்கோ தீங்கு விளைவிக்கும் எதையும் சாப்பிட விரும்பமாட்டார்கள். இதன்காரணமாக, இறைச்சி மற்றும் கடல் உணவு தவிர்ப்பதோடு, பால் மற்றும் தயிரை கூட அசைவமாக கருதுகிறார்கள். அதன்படி பால், தயிர், தேன், நெய், வெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளையும் அசைவ உணவுகளாக பார்க்கிறார்கள்.

சைவ உணவு முறையில் தாவரத்தில் இருந்து பெறப்படும் பொருட்கள் மட்டுமே உணவாக எடுத்துகொள்கிறார்கள். மேலும், சாப்பிடும் இந்த உணவுகளில் பச்சையான உணவுகளை மட்டுமே சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

பால் ஏன் அசைவம்..?

விலங்குகளின் இரத்தத்தில் இருந்து பால் சுரக்கப்படுகிறது. அதாவது பால் தரும் பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் தொடர்ந்து பால் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவை மீண்டும் மீண்டும் செயற்கையாக கருவூட்டப்படுகிறது. அப்போது புதிதாக பிறந்த கன்றுகள் தாயிடம் இருந்து பிரிக்கப்படுகிறது. இதனால் அவை தாயின் பாலை குடிக்க முடியாமல் போகும் சூழ்நிலை ஏற்படும். இது விலங்குகளுக்கு மன மற்றும் உடல் ரீதியான துன்பங்களை உண்டாக்க தொடங்கும்.

பால் தரும் மாடுகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அடிமாடுகளாக இறைச்சி கூடங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதன் காரணமாக, பால் மறைமுகமாக இறைச்சித் தொழிலின் ஒரு பகுதியாகும் என்றும் அதை சைவம் என்று அழைக்க முடியாது என்றும் சைவ உணவு உண்பவர்கள் நம்புகிறார்கள்.

பால் பொருட்களை அதிகமாக உட்கொள்வதும் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். சிலருக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருக்காது, இது பால் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இது தவிர, பால் பொருட்கள் இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களுடனும் இணைக்கப்பட்டுள்ளன. இந்தக் காரணத்திற்காகவே பலர் ஆரோக்கியமாக இருக்க சைவ உணவைப் பின்பற்றுகிறார்கள்.