AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Hand Tremors: நீண்ட நாட்களாக கை நடுக்க பிரச்சனையா..? இந்த வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்!

Vitamin B Deficiency: கை நடுக்கம் என்பது பல காரணங்களால் ஏற்படும் பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது. வைட்டமின் பி12, பி6, மற்றும் பி1 குறைபாடுகள் முக்கிய காரணங்கள். பி12 குறைபாடு நரம்பு சேதத்தையும், பி6 குறைபாடு எரிச்சல் மற்றும் மனச்சோர்வையும், பி1 குறைபாடு வெர்னிக் என்செபலோபதியையும் ஏற்படுத்தும். சரியான உணவுமுறை மூலம் இதனை சரிசெய்யலாம்.

Hand Tremors: நீண்ட நாட்களாக கை நடுக்க பிரச்சனையா..? இந்த வைட்டமின் குறைபாடாக இருக்கலாம்!
கை நடுக்கம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 28 Jun 2025 14:47 PM IST

இன்றைய காலத்தில் பலருக்கும் கை நடுக்கம் (Hand Tremors) என்பது பொதுவான பிரச்சனையாக இருந்து வருகிறது இன்றைய கால இளைஞர்கள் மதுப்பழக்கம், புகை பிடித்தல் போன்ற ஒரு சில தீய பழக்கத்தினால் குறைந்த வயதிலேயே கை நடுக்க பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதேபோல், கை நடுக்கம் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதற்கு நரம்பியல் கோளாறுகள், மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளும் காரணமாக அமைந்து விடுகிறது. வைட்டமின்களில் வைட்டமின் பி12, பி6 மற்றும் பி1 (தியாமின்) (Vitamin B Deficiency) போன்றவை நரம்பு செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இவை குறையும்போது கை நடுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்தநிலையில், எந்தெந்த வைட்டமின்கள் குறையும்போது கைநடுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை இங்கே தெரிந்துகொள்வொம்.

வைட்டமின் பி12 குறைபாடு:

வைட்டமின் பி12 குறைபாடு கை நடுக்க பிரச்சனைக்கு முக்கியமான காரணமாக அமைக்கிறது. வைட்டமின் பி12 உடலில் ஆரோக்கியமான நரம்பு செல்களைப் பராமரிக்கவும், டிஎன்ஏவை உருவாக்கவும் அவசியம். பி12 ன் குறைபாடு புற நரம்பியல் நோய்க்கு வழிவகுக்கும். இதன் காரணமாக, கைகள் மற்றும் கால்களில் உள்ள நரம்புகள் சேதமடைகின்றன. இது பெரும்பாலும் கூச்ச உணர்வு, உணர்வின்மை, சமநிலை பிரச்சினைகள் மற்றும் கை நடுக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.

பி12 குறைபாட்டிற்கான பொதுவான காரணங்களில் மோசமான உணவு உட்கொள்ளல் (குறிப்பாக சைவ உணவு உண்பவர்களில்), உறிஞ்சுதல் பிரச்சினைகள் அல்லது சில மருந்துகள் போன்றவை ஆகும். வைட்டமின் பி12 பெற அதிகபடியான றைச்சி, முட்டை மற்றும் பால் பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது.

வைட்டமின் பி6 குறைபாடு:

வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) நரம்பு ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. B6 குறைபாட்டினால் ஏற்படும் நடுக்கம் குறைவாகவே இருக்கும் என்றாலும், எரிச்சல், மனச்சோர்வு மற்றும் குழப்பம் போன்றவை ஏற்படும். பி6ன் குறைபாடு பெரும்பாலும் அதிகப்படியான அளவு சப்ளிமெண்ட் எடுத்துகொள்வது நரம்பு சேதத்திற்கு வழிவகுக்கும். வைட்டமின் பி6ஐ உடலில் ஈடுசெய்ய வாழைப்பழங்கள், கோழி, மீன் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

வைட்டமின் பி1 (தியாமின்) குறைபாடு:

வைட்டமின் பி1 (தியாமின்) குறைபாடானது கை நடுக்கம் உள்ளிட்ட சில நரம்பியல் அறிகுறிகளுக்கு மற்றொரு காரணமாக அமைக்கிறது. இது தினந்தோறும் குடித்து குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அல்லது மாலாப்சார்ப்ஷன் பிரச்சினைகள் உள்ள நபர்களுக்கு ஏற்படுகிறது. இந்த தியாமின் குறைபாடு நாளடைவில் வெர்னிக் என்செபலோபதி எனப்படும் குழப்பம், நடுக்கம் உள்ளிட்ட தீவிர மூளை கோளாறுக்கு வழிவகுக்கும். இவற்றை உடலில் ஈடுசெய்ய தானியங்கள், பன்றி இறைச்சி மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக்கொள்ளலாம்.

Follow Us