AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: ஒரே இடத்தில் நீண்டநேரம் உட்கார்ந்து வேலையா..? முன்கூட்டியே வயது அதிகரிக்கும்! ஏன் தெரியுமா?

Sitting Too Long: நாம் அடிக்கடி புறக்கணிக்கும் ஒரு விஷயம் நமக்கு பிரச்சனையாக மாறுகிறது. நமது சில அன்றாடப் பழக்கவழக்கங்கள் படிப்படியாக நமது வயதை அதிகரிக்கின்றன. வயதாவதென்பது சுருக்கங்கள் அல்லது நரை முடியுடன் (Grey Hair) மட்டும் நின்றுவிடுவதில்லை. அது உடலுக்குள்ளும், செல் மட்டத்திலும் நிகழ்கிறது. அத்தகைய சில பழக்கவழக்கங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

Health Tips: ஒரே இடத்தில் நீண்டநேரம் உட்கார்ந்து வேலையா..? முன்கூட்டியே வயது அதிகரிக்கும்! ஏன் தெரியுமா?
ஒரே இடத்தில் அமர்தல்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jun 2026 13:58 PM IST

இப்போதெல்லாம், அனைவரும் ஆரோக்கியமான வாழ்க்கை (Healthy Lifestyle) முறையை நோக்கிச் செல்கிறார்கள். இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் மது அருந்துவதை நிறுத்துகிறார்கள், ஃபாஸ்ட் ஃபுட்களைத் தவிர்க்கிறார்கள், மேலும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், நாம் அடிக்கடி புறக்கணிக்கும் ஒரு விஷயம் நமக்கு பிரச்சனையாக மாறுகிறது. நமது சில அன்றாடப் பழக்கவழக்கங்கள் படிப்படியாக நமது வயதை அதிகரிக்கின்றன. வயதாவதென்பது சுருக்கங்கள் அல்லது நரை முடியுடன் (Grey Hair) மட்டும் நின்றுவிடுவதில்லை. அது உடலுக்குள்ளும், செல் மட்டத்திலும் நிகழ்கிறது. அத்தகைய சில பழக்கவழக்கங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

ALSO READ: தலைமுடி பிரச்சனையா? தயிரில் இதை கலந்து தேய்த்தால் சரியாகும்!

நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல்:

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது மிகப்பெரிய பழக்கமாகும். ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து, உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு, உடல் பருமன் அல்லது புகைப்பிடித்தலுக்கு இணையான இறப்பு அபாயம் இருக்கலாம். இருப்பினும், தினமும் 60-75 நிமிடங்கள் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த அபாயத்தைக் குறைக்க முடியும். நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. மேலும், இது உடலின் டி.என்.ஏ-வின் டெலோமியர்களைச் சுருங்க செய்து, முதுமையடைதலை விரைவுபடுத்துகிறது.

தூக்கமின்மை

மற்றொரு பெரிய பிரச்சனை, போதுமான அளவு தூங்காமல் இருப்பது. 5 மணி நேரத் தூக்கம் போதும் என்று நினைப்பவர்கள் உடல் அளவில் மட்டுமல்லாமல், மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். தூக்கத்தின் போது, ​​உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்கிறது. ஹார்மோன்களைச் சமநிலைப்படுத்தி, ஆற்றலை மீண்டும் நிரப்பிக் கொள்கிறது. நாள்பட்ட தூக்கமின்மை, சருமம், நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மன அழுத்தம்:

தொடர்ச்சியான மன அழுத்தம் 3வது தீங்கு விளைவிக்கும் பழக்கமாகும். நீடித்த மன அழுத்தம் உடலில் கார்டிசோல் ஹார்மோனை அதிகரிக்கிறது. இது சருமத்தைப் பாதித்து சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. இது தவிர, இதயம், செரிமானம் மற்றும் மன ஆரோக்கியத்திலும் இது மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

அதிக நேரம் திரை:

செல்போன் அல்லது லேப்டாப்புக்கு முன்னால் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது வயதாவதை விரைவுபடுத்துகிறது. இவைகளில் இருந்து வெளிப்படும் ஃப்ளூ ரே தூக்கச் சுழற்சியைச் சீர்குலைப்பதோடு, சருமத்தையும் பாதிக்கிறது. அதே சமயம், குறைவாகத் தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, சருமம் பொலிவிழந்து காணப்படுகிறது. மேலும், பல முக்கிய செயல்பாடுகளும் மெதுவாகின்றன.

மற்ற தீய பழக்கங்கள்..

அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதும் பிரச்சனையை தரும். இது கிளைக்கேஷன் செயல்முறையை அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைக் குறைத்து, முன்கூட்டியே சுருக்கங்கள் ஏற்பட வழிவகுக்கிறது.

ALSO READ: அடிக்கடி மறதியா? உஷார்.. இப்படி ஒரு நோயாக இருக்கலாம்!

வலிமைப் பயிற்சியைப் புறக்கணித்தல்:

வயதாக ஆக தசையின் அளவு குறைகிறது. நீங்கள் உடற்பயிற்சி செய்யாவிட்டால், இந்த செயல்முறை வேகமடைகிறது.

சமூகத் தொடர்புகளைப் புறக்கணித்தல்:

தனிமையும் சமூகத் தனிமைப்படுத்தலும் முன்கூட்டிய முதுமை மற்றும் இறப்புக்கான அபாயத்தை அதிகரிக்கின்றன.

Follow Us