Morning Stiffness: காலையில் எழுந்தவுடன் கை, கால்களில் வலியா..?ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்!

Morning Stiffness in Hands and Feet: காலையில் எழுந்தவுடன் கை, கால்களில் வலி, விறைப்பு ஏற்படுவது பல ஆரோக்கியப் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். கீல்வாதம், வைட்டமின் குறைபாடு, தைராய்டு கோளாறு, இரத்த ஓட்டக் கோளாறு போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

Morning Stiffness: காலையில் எழுந்தவுடன் கை, கால்களில் வலியா..?ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்!

காலையில் எழுந்ததும் கால் வலி

Published: 

19 Aug 2025 13:40 PM

காலையில் எழுந்தவுடன் (Stiffness in Feet) உங்கள் கை மற்றும் கால்களில் விறைப்பு, வலி (Foot Pain) அல்லது குத்துதல் போன்றவற்றை உணர்ந்தால், உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சில நேரங்களில் மக்கள் இதை சோர்வு மற்றும் வயது அதிகரிப்பு காரணமாக ஏற்படுகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு இதன் பொருள் அல்ல. காலையில் எழுந்தவுடன் கைகள் மற்றும் கால்களில் வலி, குத்துதல் போன்றவை ஏற்பட்டால், இது பெரும்பாலும் மூட்டு நோய்கள், வைட்டமின் குறைபாடு (Vitamin Deficiency), தைராய்டு பிரச்சனை அல்லது இரத்த ஓட்டக் கோளாறு ஆகியவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

காலையில் எழுந்தவுடன் உங்கள் கைகள் மற்றும் கால்களில் ஏற்படும் பிரச்சனைகளை, நீங்கள் தினமும் உணரப்பட்டு நீண்ட நேரம் நீடித்தால், மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதன்படி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிரச்சனைகளில் ஏதேனும் ஒன்றால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அர்த்தம்.

ALSO READ: கொலஸ்டிராலால் அவதிப்படுகிறீர்களா? இயற்கையான வழியில் கட்டுப்படுத்துவது எப்படி?

தைராய்டு பிரச்சனைகள்

தைராய்டு அளவுகள் சமநிலையற்றதாக இருக்கும்போது, தசைகளில் வலி, வீக்கம் மற்றும் விறைப்பு ஏற்படலாம். குறிப்பாக காலையில் எழுந்திருக்கும் போது இந்தப் பிரச்சனை அதிகமாக சந்திக்க நேரிடும்.

கீல்வாதம்

காலையில் எழுந்தவுடன் மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படுவதுதான் கீல்வாதத்தின் முக்கிய அறிகுறியாகும். இந்த நோய் மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இது விறைப்புத்தன்மையையும் இயக்கத்தில் சிரமத்தையும் ஏற்படுத்தும்.

இரத்த ஓட்டத்தில் தொந்தரவு

இரத்த ஓட்டம் சரியாக இல்லாததால் கூச்ச உணர்வு, கை, கால்களில் உணர்வின்மை அல்லது வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

வைட்டமின் டி மற்றும் கால்சியம் குறைபாடு

எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த வைட்டமின் டி மற்றும் கால்சியம் அவசியம். அவற்றின் குறைபாடு எலும்புகளை பலவீனப்படுத்தி காலையில் அதிக வலியை ஏற்படுத்துகிறது.

நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை

நீர் மற்றும் தாதுக்கள் இல்லாததால் தசை பிடிப்பு மற்றும் வலியும் ஏற்படலாம்.

ALSO READ: நீரிழிவு நோய் பாதிப்பை குறைக்க வேண்டுமா? இந்த தினசரி பழக்கங்களை டிரை பண்ணுங்க!

இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க என்ன செய்யலாம்..?

  •  வைட்டமின் டி, கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த சமச்சீரான உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
    காலையில் லேசாக நீட்சி மற்றும் யோகா போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இது தசைகளை நெகிழ்வானதாக மாற்றும்.
  • நீரிழப்பினால் ஏற்படும் பிரச்சனைகளை தவிர்க்க, தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்து, நீரேற்றத்துடன் இருக்க முயற்சி செய்யுங்கள்.
  • கழுத்து மற்றும் முதுகு சரியான திசையில் வைத்து தலையணை தேவையான ஆதரவாக வைத்து தூங்குங்கள்.
  • காலையில் எழுந்ததும் உங்களுக்கும் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.

காலையில் எழுந்தவுடன் கை, கால்களில் ஏற்படும் வலியை லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது உங்கள் உடலில் ஏதோ தவறு இருக்கிறது என்பதற்கான அறிகுறிகளாக இருக்கலாம். சரியான நேரத்தில் பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சை மூலம், நீங்கள் இந்த பிரச்சனையிலிருந்து விரைவாக விடுபட்டு தீவிரமான நோயிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.