Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எளிமையான யோகா… ஒரே ஆண்டில் 83 கிலோ எடை குறைத்த 87 வயது பாட்டி

Fitness Inspiration: சமீப காலமாக வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக உடல் எடை அதிகரிப்பு பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமிர்தசரஸை சேர்ந்த ஒரு 87 வயது பெண் ஒரே ஆண்டில் 83 கிலோ எடை குறைத்திருக்கிறார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

எளிமையான யோகா… ஒரே ஆண்டில் 83 கிலோ எடை குறைத்த 87 வயது பாட்டி
83 கிலோ எடை குறைத்த சகுந்தலா தேவி
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Sep 2025 19:48 PM IST

உடல் எடை குறைப்பது (Weight Loss) என்பது நினைத்தவுடன் நடந்து விடாது. அதற்கு பின்னால் கடின உழைப்பு, ஒழுங்குமுறை, கட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியான  முயற்சிகளால் மட்டுமே கிடைக்கும். இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக உடல் பருமானால் அவதிப்படுகின்றனர். இதற்காக உடல் எடை குறைக்கும் முயற்சியில் கடும் சவால்களை சந்தித்து வருகிறார்கள். ஆனால், ஒரு 87 வயது பெண் ஒரே ஆண்டில் 83  கிலோ எடை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். யோகாவின் (Yoga) மூலம் அவர் இந்த சானையை செய்திருக்கிறார்.

83 கிலோ எடைக் குறைத்த 87  வயது பாட்டி

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி. தற்போது 87 வயதான இவர் சமீபத்தில் லாஃப்டர் செஃப் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசி அவர், தான் 123 கிலோ எடையுடன் மிகவும் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து யோகாசனம் மற்றும் அதிரடியான கட்டுப்பாடுகள் மூலம் ஒரே ஆண்டில் 83 கிலோ எடை குறைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவர் 40 கிலோ மட்டுமே இருக்கிறார்.

வைரலாகும் பாட்டியின் வீடியோ

 

இதையும் படிக்க : நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கிறீர்களா? அதிகரிக்கும் மாரடைப்பு அபாயம்

பின்னர் அந்த நிகழ்ச்சியில் அவர் யோகாசனங்கள் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவரது திறமையைப் பார்த்து அனைவரும் திகைத்துப் போனார்கள். குறிப்பாக 83 வயதிலும் அசராமல் புஷ் அப் செய்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

எடை குறைத்தது எப்படி?

கடந்த 2008 ஆம் ஆண்டு உடல் எடை அதிகரிப்பால் சகுந்தலா தேவி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். குறிப்பாக அவர் கண் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இதனால் வாழ்க்கை மிகுந்த சவாலாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் தான் பாபா ராம்தேவின் மூலம் யோகா அவருக்கு அறிமுகமாகியிருக்கிறது. முதலில் வீட்டில் எளிய ஆசனங்களை தினமும் செய்து வந்தார். மருந்துகளுக்கு பதிலாக இயற்கை மருந்துகளை தேர்ந்தெடுத்தார்.

இதையும் படிக்க : கர்ப்ப காலத்தில் டீ குடிப்பது எவ்வளவு பாதுகாப்பானது? ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ குடிக்கலாம்..?

கடுமையான யோகா பயிற்சி

கடந்த 2009 ஆம் ஆண்டு ஹரித்வாருக்கு பயணம் செய்து யோகா கற்றார். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து யோகா ஆசனங்களை செய்வது அவரது வழக்கமாக மாறியது. இதனையடுத்து ஒரே ஆண்டில் எடை குறைத்ததோடு யோகா அவருடயை உடல் ஆரோக்கியத்தை ஆச்சரியப்படும் வகையில் மேம்படுத்தியது. தற்போது 87 வயதில் கூட, சகுந்தலா தேவி கடுமையான யோகா பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். மற்றவர்களுக்கு யோகா பயிற்சி அளித்து வருகிறார்.  வயதாகி விட்டது, வாழ்க்கை முடிந்து விட்டது என புலம்புபவர்களுக்கு மத்தியில் கடுமையாக உழைத்து தன் வாழ்க்கையை மீட்டெடுத்த சகுந்தலா தேவி அனைவருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.