சூர்யா 47 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு…!
Suriya 47 Movie Pooja Video: நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் சூர்யா 47. இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது. இந்த நிலையில் படத்தின் பூஜை வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சூர்யா 47
மலையாள சினிமாவில் பிரபல இயக்குநராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் வலம் வருபவர் ஜித்து மாதவன். அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான படம் ரோமன்சாம். இந்தப் படத்தை இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் ஜித்து மாதவன். இந்தப் படத்தில் நடிகர்கள் சௌபின் ஷாஹிர்,
அர்ஜுன் அசோகன், சஜின் கோபு, சிஜு சன்னி, அப்சல் PH, அபின் பினோ, அனந்தராமன் அஜய், ஜெகதீஷ் குமார், ஜோமன் ஜோதிர், ஸ்ரீஜித் பாபு, நோபல் ஜேம்ஸ், ஆதித்ய பாஸ்கர், தீபிகா சிவா, சினேகா மேத்யூ, தீபக் நாராயண், தங்கம் மோகன், ஜாலி சிராயத், பூஜா மோகன்ராஜ், பிரேம்நாத் கிருஷ்ணன்குட்டி, அசிம் ஜமால், செம்பன் வினோத் ஜோஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
ஹாரர் காமெடி பாணியில் உருவான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் படம் பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் ஜித்து மாதவன் எந்த நடிகருடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் சூர்யா உடன் கூட்டணி வைப்பது குறித்து அறிவிப்பு வெளியானது.
சூர்யா 47 படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு:
அதன்படி இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்க இது அவரது நடிப்பில் உருவாகும் 47-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் நஸ்ரியா நசீம் மற்றும் நஸ்லேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்தை நடிகர் சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் படத்தின் பூஜை சமீபத்தில் நடைப்பெற்ற நிலையில் பூஜை வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
Also Read… வழக்காடு மன்றமாக மாறிய பிக்பாஸ் வீடு… வன்மத்தை கொட்டும் போட்டியாளர்கள்
சூர்யா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
With blessings, we begin the shoot! 🎥💫#Suriya47 Pooja Glimpse ❤️@Suriya_offl #JithuMadhavan pic.twitter.com/rArDE0QwD1
— Zhagaram Studios (@ZhagaramOffl) December 9, 2025
Also Read… மீண்டும் தள்ளிப்போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம்? வைரலாகும் தகவல்