AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ghaati: அனுஷ்காவின் ‘காதி’ படம்.. முதல் பாடல் குறித்து வெளியான அப்டேட்!

Ghaati Movie First Single Update : கோலிவுட் சினிமாவில் முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருப்பவர் விக்ரம் பிரபு. இவர் தெலுங்கு சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம்தான் காதி. நடிகை அனுஷ்கா ஷெட்டியின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீசாகும் என்பதைப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ghaati: அனுஷ்காவின் ‘காதி’ படம்..  முதல் பாடல் குறித்து வெளியான அப்டேட்!
விக்ரம் பிரபு, அனுஷ்கா ஷெட்டிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 20 Jun 2025 12:16 PM IST

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம்வருபவர் அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty). இவரின் முன்னணி நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் காதி (Ghaati). இந்த திரைப்படத்தைத் தெலுங்கு பிரபல இயக்குநரான க்ரிஷ் ஜாகர்லமுடி (Krish Jagarlamudi), இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் அறிவிப்புகளானது கடந்த 2024 நவம்பர் மாதத்திலே வெளியிடப்பட்டிருந்தது. இந்த திரைப்படத்தில் ஆரம்பத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டிதான் முன்னணி கதாநாயகியாக நடிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அதை தொடர்ந்துதான் நடிகர் விக்ரம் பிரபு (Vikram Prabhu) இப்படத்தின் மூலம் தெலுங்கிலும் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் என்றும் அறிவிப்புகள் வெளியானது. நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது.

அதில் அவர் புகைபிடிப்பதுபோல வெளியாகியிருந்த நிலையில், இணையத்தில் வைரலாக பரவி வந்தது. இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 2025, ஜூலை 11ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் பற்றிய அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தின் முதல் பாடல் வரும் 2025, ஜூன் 21ம் தேதியில் வெளியாகும் எனப் படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காதி படக்குழு வெளியிட்ட முதல் பாடல் ரிலீஸ் பதிவு :

காதி படத்தின் கதைக்களம் :

இந்த காதி படத்தில் முன்னணி கதாநாயகியாக அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ளார்.   அதைத் தொடர்ந்துதான் இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில்தான் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இப்படத்தில் ஜோடியாக இணைந்து நடித்திருக்கின்றனர். இந்த காதி திரைப்படமானது மாஃபியா மற்றும் கடத்தல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகியிருக்கிறதாம்.

இதில் நடிகை அனுஷ்கா ஷெட்டியும் அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்திருக்கிறாராம். போதை பொருள் கடத்தல் போன்ற மாறுபட்ட படமாக இந்த காதி உருவாகியிருக்கிறதாம். இந்த படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் நடிகராக அறிமுகமாகியிருக்கும் நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காதி திரைப்படம் :

அனுஷ்கா மற்றும் விக்ரம் பிரபுவின் இந்த காதி படத்தை இயக்குநர் க்ரிஷ் ஜாகர்லமுடி இயக்கியிருக்கும் நிலையில், இப்படத்தின் கதையை எழுத்தாளர் சிந்தகிண்டி ஸ்ரீனிவாஸ் ராவ் எழுதியுள்ளார். மேலும் இப்படத்தை ஃபர்ஸ்ட் பிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஷ் போன்ற நிருவங்க்ள இணைந்து தயாரித்துள்ளது. அனுஷ்காவின் இந்த காதி படத்திற்கு தெலுங்கு இசையமைப்பார் நாகவெல்லி வித்யா சாகர் இசையமைத்திருக்கிறார்.

இவரின் இசையமைப்பில்தான் இப்படத்தின் முதல் பாடல் 2025, ஜூன் 21ம் தேதியில் வெளியாகிறது. பிரம்மாண்ட கதைக்களம் கொண்ட இப்படமானது வரும் 2025, ஜூலை 11ம் தேதியில், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us