ViRosh: திருமணத்திற்கு அழைக்கவில்லை என வீடியோ போட்ட கியூட் சிறுமி.. வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த விரோஷ் தம்பதியினர் – வீடியோ!

ViRosh Meets Cute little Fan: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா இருவருமே கடந்த 2026 பிப்ரவரி மாதத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இவர்களின் திருமண செய்தியறிந்து, சிறுமி ஒருவர் தன்னை திருமணத்திற்கு அழைக்கவில்லை என வீடியோ போட்டிருந்த நிலையில், அது வைரலானது. அந்த வகையில் அந்த சிறுமியை அழைத்து விரோஷ் தம்பதி விருந்து கொடுத்துள்ளனர்.

ViRosh: திருமணத்திற்கு அழைக்கவில்லை என வீடியோ போட்ட கியூட் சிறுமி.. வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த விரோஷ் தம்பதியினர் - வீடியோ!

கியூட் ரசிகையை நேரில் சந்தித்த விரோஷ்

Updated On: 

21 Mar 2026 12:36 PM

 IST

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) மற்றும் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) இருவருமே, கடந்த சில ஆண்டுகளாக காதலித்துவந்தனர். இது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இவர்களின் காதல் ஒரு படிக்கும் மேலாக திருமணத்தில் முடிந்துள்ளது. இந்த பெர்ஃபெக்ட் ஜோடியின் திருமண விழா ராஜஸ்தானின் உதய்பூரில், கடந்த 2026 ஆண்டு பிப்ரவரி 26 அன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் இருவரின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். அவர்கள் புதுமணத் தம்பதியினரை வாழ்த்தினர். இந்த பிரம்மாண்டமான திருமணத்திற்குப் பிறகும், புதுமணத் தம்பதியினர் (ViRosh) மிகவும் பரபரப்பாக தொடர்ந்து அடுத்தடுத்த விழாக்களிலும் இருந்தனர். மேலும், விஜய் மற்றும் ராஷ்மிகாவின் குழுவினர் நாடு முழுவதும் பல இடங்களில் இனிப்புகளை விநியோகித்ததுடன், கோயில்களில் உணவு வழங்கும் நிகழ்ச்சிகளையும் நடத்தினர்.

மேலும், கடந்த 2026 மார்ச் 5ம் தேதியில் ராஷ்மிகா மற்றும் விஜய்யின் வரவேற்பு நிகழ்ச்சியும் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த வகையில் இவர்களின் திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என ஒரு பெண் குழந்தை வீடியோவை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ தீயாக பரவிய நிலையில், விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே, அதில் பதிலளித்திருந்தனர். அந்த வகையில் அந்த குழந்தையின் ஆசையை இருவரும் நிறைவேற்றும் விதத்தில் ஸ்பெஷல் விருந்து கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: இன்றைய தலைமுறைக்கு என்ற திரைப்படம்.. கென் கருணாஸின் யூத் படத்தை பாராட்டிய சிலம்பரசன்!

சிறுமிக்கு விருந்து கொடுத்த விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா:

அந்த வீடியோவில் சிறுமி, விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்குத் திருமணம் ஆகிவிட்டது, இல்லையா? நாங்களும் உங்கள் ரசிகர்கள் தானே? அப்படியிருக்க, எங்களை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை? நீங்கள் அனைவருக்கும் லட்டு கொடுக்கிறீர்கள், உணவு விநியோகம் செய்கிறீர்கள். நாங்களும் உங்களுக்காக சமூக வலைதளங்களில் ரீல்களையும் வீடியோக்களையும் பதிவிடுகிறோம் என்று அந்த குழந்தை அந்த வீடியோவை வெளியிட்டிருந்தது. குழந்தையின் வீடியோ வைரலாகி விஜய் மற்றும் ராஷ்மிகாவைச் சென்றடைந்த நிலையில், அவர்கள் அந்த வீடியோவின் கீழ் கருத்தை தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க: ரசிகர்கள் ஷாக்.. விரைவில் விஜய் டிவியில் முடிவுக்கு வரும் சீரியல்? எந்த தொடர்-னு தெரியுமா?

அதைத் தொடர்ந்து, விரோஷ் தம்பதியினர் குழந்தையை நேரில் சந்தித்துள்ளனர். விரோஷ் தம்பதியினர் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து, தங்கள் கைகளாலேயே அதற்கு உணவை பரிமாறினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உணவுக்குப் பிறகு, விஜய் மற்றும் ராஷ்மிகா குழந்தையுடன் உரையாடினர். குழந்தையின் அழகான வார்த்தைகளைக் கேட்டு விஜய் மற்றும் ராஷ்மிகா சிரித்தபடியான வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இணையத்தில் வைரலாக விரோஷ் தம்பதியினரின் வீடியோ பதிவு:

இந்த பதிவில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே, அந்த சிறுமியுடன் கொஞ்சி விளையாடி, உணவு பரிமாறிய சுவாரஸ்ய விஷயங்கள் உள்ளடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
Related Stories
Jana Nayagan: ரசிகர்களுக்கு ஷாக் தகவல்… ஜன நாயகன் படத்தில் மியூட் செய்யப்பட்ட வசனங்கள் – சென்சார் குழு அதிரடி!
டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தில் இருக்கும் தமிழ் சீரியல்.. அய்யனார் துணை சீரியல் எந்த இடத்தில் தெரியுமா?
சிலம்பரசனின் STR51 படத்தின் டைட்டில் இதுவா? படத்தின் ஷூட்டிங் எப்போது தொடக்கம் தெரியுமா?
Youth: இன்றைய தலைமுறைக்கு என்ற திரைப்படம்.. கென் கருணாஸின் யூத் படத்தை பாராட்டிய சிலம்பரசன்!
Ajith Kumar: இனி ஹீரோ மட்டும் கிடையாது.. அஜித் குமாரின் புதிய அவதாரம்.. என்னனு தெரியுமா?
Trisha Krishnan: மணிரத்னம் சார் சொன்ன ஒரு வார்த்தை.. நாள் முழுவதும் அப்படித்தான் இருந்தேன் – திரிஷா சொன்ன விஷயம்!
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்