AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடிநீர் பாட்டில் விலை கடும் உயர்வு – ஒரு லிட்டர் பாட்டில் விலை இவ்வளவா?

Water Can Price Rise : மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக பெட்ரோலியத்தில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கின் மூலப்பொருள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் குடிநீர் பாட்டில்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

குடிநீர் பாட்டில் விலை கடும் உயர்வு – ஒரு லிட்டர் பாட்டில் விலை இவ்வளவா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 21 Mar 2026 15:19 PM IST

சென்னை, மார்ச் 21 : மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் பதற்றம் உலக அளவில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் பெட்ரோலியம் சார்ந்து பிளாஸ்டிக் மூலப்பொருளின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் காரணமாக பிளாஸ்டிக் மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பிளாஸ்டிக் பாட்டில்கள் விலையும் உயர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கடைகளில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஹோட்டல்களில் உணவுகளின் விலையும் அதிகரிக்கலாம் என்றும் இதனால் மக்கள் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்ககலாம்.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இது நேரடியாக சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் பவர் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. இதன் தாக்கம் குடிநீர் பாட்டிலின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பிளாஸ்டிக்கிற்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் காரணமாக பிளாஸ்டிக் பாட்டிலின் உற்பத்தி விலை உயர்ந்துள்ளது. இதனால் குடிநீர் பாட்டில்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க : K.N.Nehru Tamil Nadu Election: கே.என்.நேருவின் கோட்டையாக தொடருமா திருச்சி மேற்கு தொகுதி!

குடிநீர் பாட்டில் விலை கடும் உயர்வு

இதனையடுத்து குடிநீர் விற்பனை நிறுவனங்களும் விலையை உயர்த்தியுள்ளன. கடந்த வாரம் வரை 200 மி.லி குடிநீர் பாட்டில் ரூ.8க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2 உயர்ந்து ரூ.10க்கு விற்கப்படுகிறது. அதே போல ரூ.10க்கு விற்கப்பட்ட 300 மி.லி குடிநீர் பாட்டில் தற்போது 12க்கும், ரூ.12க்கு விற்கப்பட்ட 500 மி.லி குடிநீர் பாட்டில் ரூ.16க்கும் விற்கப்படுகிறது.

பெரும்பாலானோர் அதிகம் வாங்கும் ரூ.20க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பாட்டில் ரூ.25க்கும் விற்கப்படுகிறது. மேலும் ரூ.30க்கு விற்கப்பட்ட 2 லிட்டர் பாட்டில் தற்போது ரூ.35க்கு விற்கப்படுகிறது. அதே போல் ரூ.50க்கு விற்கப்பட்ட 5 லிட்டர் பாட்டில் ரூ.70க்கு விற்கப்படுகிறது. அதே போல மீண்டும் பயன்படுத்தக் கூடிய கேன்களில் அடைக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன் தற்போது ரூ.45 முதல் ரூ.55 வரை விலை உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க : திருச்செந்தூர்: பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினால் ரூ.1 லட்சம் அபராதம்..!

இதன் காரணமாக ஹோட்டல்களில் உணவுகளின் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் சிக்கல்களை சந்தித்து வருகின்றன. தற்போது குடிநீர் பாட்டில்கள் விலை உயர்வு ஹோட்டல் உரிமையாளர்களை கடுமையாக பாதிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

Follow Us