வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்காததற்கு இதுதான் காரணமா? திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன விசயம்

Tiruppur Subramaniam Talks About Venkat Prabhu And Sivakarthiyen Movie: தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியம் அவ்வபோது அளிக்கும் பேட்டிகளில் சினிமா துறையில் நடைபெறும் விசயங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்.

வெங்கட் பிரபு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்காததற்கு இதுதான் காரணமா? திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன விசயம்

திருப்பூர் சுப்பிரமணியம்

Published: 

03 Apr 2026 18:45 PM

 IST

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து அவர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனது 26-வது படத்திற்காக சிவகார்த்திகேயன் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்தப் படத்திற்கு சேயோன் என்று பெயர் வைக்கபப்ட்ட நிலையில் படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மராஸி படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போதே இயக்குநர் வெங்கட் பிரபு உடனான கூட்டணி அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்தப் படத்திற்கு பதிலாக சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்து முடித்தார். பிறகு பராசக்திக்கு பிறகாவது இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர் சேயோன் படத்தில் நடிப்பதாக அறிவித்தார். இந்த நிலையில் வெங்கட்பிரபு உடனான படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் படம் நின்றதற்கு காரணம் இதுதான்:

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் சம்பளத்திற்கு பதிலாக லாபத்தில் இருந்து ஷேர் வேண்டும் என்று பேசியுள்ளார். ஆனால் லாபம் குறைவாக இருந்ததால் சம்பளத்தைவிட ஷேர் மிகவும் குறைவாக வந்துள்ளது. இதன் காரணமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிக்க இருந்த படத்தை விட்டுவிட்டு சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதால் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒத்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அந்தப் படம் நடைபெறவில்லை என்று தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… காளிதாஸ் 2 முதல் லீடர் வரை… இந்த வாரம் தியேட்டரில் எந்த படத்தை முதலில் பார்ப்பீங்க

இணையத்தில் வைரலாகும் திருப்பூர் சுப்பிரமணியம் பேச்சு:

Also Read… Hi Movie: நயன்தாராவின் ஹாய் பட கதை இதுதான்.. அஜித் – ஷாலினியை குறிப்பிட்டு சொன்ன இயக்குநர்!

Follow Us
தன்னை கடித்த பாம்பை தைரியமாக பிடித்த முதியவர்
கேர்ள் ஃபிரெண்டுடன் லூட்டி அடிக்கும் குரங்கு - வைரல் வீடியோ
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் நாயை காப்பாற்றிய பெண்.. இணையத்தில் வைரல்..
தாயின் பக்கெட் லிஸ்டை நிறைவேற்றிய மகன்... இணையத்தில் வைரல்..