இன்று ஜன நாயகன் படத்தைப் பார்க்கும் ரிவைசிங் கமிட்டி?
Jana Nayagan Movie Censor Update: தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி தற்போது ரசிகர்களிடையே படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ஜன நாயகன். இந்த நிலையில் இந்தப் படத்தின் சென்சார் பிரச்சனை குறித்த அப்டேட் வைரலாகி வருகின்றது.

ஜன நாயகன்
நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படம் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 69-வது படம் ஆகும். இந்தப் படம் தான் அவரது நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இனி படங்களில் நடிப்பதில்லை என்று கூறியதால் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. இருந்தாலும் இது விஜய் நடிப்பில் வெளியாகும் இறுதிப் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது. இந்த ஜன நாயகன் படத்தை இயக்குநர் எச். வினோத் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜூ, பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, ரேவதி, நிழல்கள் ரவி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணன் தயாரித்து உள்ள நிலையில் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையாமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெளியீடு கடந்த ஜனவரி மாதமே வெளியாக இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக படம் தொடர்ந்து வெளியாகாமல் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.
இன்று ஜன நாயகன் படத்தைப் பார்க்கும் ரிவைசிங் கமிட்டி?
திருத்தக் குழு இன்று ஜன நாயகன் படத்தைப் பார்வையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெட்டுக்கள் அல்லது மறுசமர்ப்பிப்பு காரணமாக ஏற்படும் கூடுதல் தாமதங்கள் ஏதுமின்றி, இதுவே இறுதித் தீர்மானமாக அமையும் என நம்புவோம். சமீபத்திய ஊடகச் செய்திகளின்படி, மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மே 7-ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதுவே நடக்கும் பட்சத்தில், மே மாதம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் அடுத்தடுத்துப் பெரிய படங்கள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… தல ஃபேன்ஸ்க்கு ஒரு ஹேப்பி நியூஸ்… இணையத்தில் வைரலாகும் ஏகே 64 படத்தின் ஷூட்டிங் அப்டேட்?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan – The Revising Committee is expected to watch the film today..✌️ Hope this will be the final call without any further delays due to cuts and resubmission.
According to the latest media reports, the film is aiming for a May 7 release after the results on May 4.. If… pic.twitter.com/APdIVAYPRQ
— Laxmi Kanth (@iammoviebuff007) March 17, 2026
Also Read… விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் வெற்றிமாறன்