AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: மீண்டு வந்து மும்பையை மீட்டெடுத்த ரோஹித் சர்மா.. மீண்டும் தோல்வியை தொட்ட லக்னோ!

MI vs LSG Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 4ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

IPL 2026: மீண்டு வந்து மும்பையை மீட்டெடுத்த ரோஹித் சர்மா.. மீண்டும் தோல்வியை தொட்ட லக்னோ!
ரிக்கி ரிக்கல்டன் - ரோஹித் சர்மா
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 04 May 2026 23:39 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 4ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிகப்பெரிய இன்னிங்ஸை ஆடிய ரோஹித் சர்மா, வெறும் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களின் உதவியுடன் 84 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 190.91 ஆக இருந்தது. அதே நேரத்தில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரிக்கி ரிக்கல்டன் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களின் உதவியுடன் 83 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 259.38 ஆக இருந்தது.

ALSO READ: பஞ்சாப் அணியும் தோல்வி.. பந்தயத்தில் தடுமாற்றம்.. பிளே ஆஃப் செல்ல மற்ற அணிகள் சமன்பாடு இதோ!

கலக்கிய ரோஹித் சர்மா:

ரோஹித் மற்றும் ரிக்கி ரிக்கல்டன் இணைந்து 65 பந்துகளில் முதல் விக்கெட்டுக்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து லக்னோ அணியின் முதுகெலும்பை உடைத்தனர். இந்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை மும்பை அணிக்கு சாதகமாக மாற்றியது. இரு பேட்ஸ்மேன்களுக்கும் எதிராக லக்னோவின் பந்துவீச்சாளர்கள் எதிராக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பழைய பார்முக்கு திரும்பி நம்பிக்கை அளித்தது. அதாவது, பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதிபெறுவதற்கான தனது எஞ்சிய நம்பிக்கையையும் மும்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ALSO READ: ஒரே நாளில் நடந்த 2 போட்டிகள்.. மாறாத புள்ளிகள் அட்டவணை.. யார் முதலிடம்..?

மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா?


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான நம்பிக்கை ஏற்கெனவே மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது. இன்று லக்னோவிடம் தோற்றிருந்தால், அதிகாரப்பூர்வமாக இல்லாவிட்டாலும், புள்ளிவிவரப்படி, மும்பை அணி பிளேஆஃப் போட்டியில் இருந்து முழுமையாக வெளியேறியிருக்கும். 10 போட்டிகளில், இந்த சீசனில் மும்பை பெற்ற 3வது வெற்றி இதுவாகும். மும்பை இப்போது 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இங்கிருந்து, மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால், எப்படியாவது பிளேஆஃப் இடத்தை உறுதி செய்ய முயற்சித்து போராடும்.

Follow Us