IPL 2026: மும்பையில் லக்னோவை லாக் செய்யுமா மும்பை.. ஹெட் டூ ஹெட் யாருக்கு சாதகம்?
MI vs LSG: புள்ளிகள் அட்டவணையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 போட்டிகளில் 6-ல் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணியும் 9 போட்டிகளில் 7-ல் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இது இரு அணிகளுக்கும் மிகவும் கடினமான போட்டியாக இருக்கும்.
ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 4ம் தேதி 47வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. புள்ளிகள் அட்டவணையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 போட்டிகளில் 6-ல் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியும் 9 போட்டிகளில் 7-ல் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இது இரு அணிகளுக்கும் மிகவும் கடினமான போட்டியாக இருக்கும். இன்றைய போட்டி, இரு அணிகளும் தங்களின் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் பெறுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பாகும்.
ALSO READ: அடுத்தடுத்து விதி மீறல்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை!
ரிஷப் பண்ட் தலைமையிலான எல்.எஸ்.ஜி அணி, பேட்டிங்கில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது, அதே சமயம் அவர்களின் பந்துவீச்சாளர்கள் பாராட்டத்தக்க முயற்சியை வெளிப்படுத்தியுள்ளனர். லக்னோவின் கடைசிப் போட்டியில், மொஹ்சின் கானின் சிறப்பான பந்துவீச்சு வீணானது. மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.




ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா போன்ற முக்கிய வீரர்களின் நிலையற்ற ஆட்டத்தால் மும்பை அணி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஹர்திக்கின் கேப்டன் பதவியும் கேள்விக்குறியாகியுள்ளது. தொடை தசைநார் காயம் காரணமாக ரோஹித் சர்மா இல்லாததால் அணி பலவீனமாகக் காணப்படுகிறது, இது இனிவரும் போட்டிகளில் தவறு செய்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் பயணத்தில் இருந்து வெளியேறும்.
இரு அணிகளும் இதுவரை நேருக்கு நேர்:
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக, லக்னோ சூப்பர் ஜெயண்டேஸ் மிகவும் சிறப்பான சாதனையைக் கொண்டுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளுக்கும் இடையே மொத்தம் 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், இந்த சாதனையில் லக்னோ வான்கடே மைதானத்தில் பெற்ற இரண்டு வெற்றிகளும் அடங்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்
மும்பை இந்தியன்ஸ் அணி :
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீஜீத் கிருஷ்ணன் (விக்கெட் கீப்பர்), பெவோன் ஜேக்கப்ஸ், திலக் வர்மா, நமன் திர், வில் டி ஜாக்ஸ், கேசவ் மகராஜ், ராஜ் அங்கேஷ் புதூர், ராஜ் அங்கத் பவா சர்மா, தீபக் சாஹர், அஷ்வினி குமார், ரீஸ் டாப்லி, விஎஸ் பென்மெட்சா, முஜீப் உர் ரஹ்மான், ஜஸ்பிரித் பும்ரா.
ALSO READ: ஐபிஎல் 2027ல் கேப்டனை மாற்றப்போகும் 3 அணிகள்..? காரணம் இதுதான்..!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி:
ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம், ஹிம்மத் சிங், மேத்யூ பிரிட்ஸ்கே, முகுல் சவுத்ரி, அக்ஷத் ரகுவன்ஷி, ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் மார்ஷ், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, அர்ஷின், குல்கர்னி, வான் குல்கர்னி, வான்கா குல்கர்னி, ஷமி, அவேஷ் கான், எம். சித்தார்த், திக்வேஷ் சிங், ஆகாஷ் சிங், பிரின்ஸ் யாதவ், அர்ஜுன் டெண்டுல்கர், என்ரிக் நார்ட்ஜே, நமன் திவாரி, மயங்க் யாதவ் மற்றும் மொஹ்சின் கான்.