AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ரகுவன்ஷி, ரஹானேவின் சூப்பர் ஆட்டம்.. ஹைதராபாத் வெற்றி பயணத்தை முடித்த கொல்கத்தா!

SRH vs KKR Highlights: ஐபிஎல் 2026 சீசனில் இன்று அதாவது 2026 மே 3ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மதியம் 3.30 மணிக்கு மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 166 ரன்களை எட்டி வெற்றி பெற்றது.

IPL 2026: ரகுவன்ஷி, ரஹானேவின் சூப்பர் ஆட்டம்.. ஹைதராபாத் வெற்றி பயணத்தை முடித்த கொல்கத்தா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்Image Source: KKR/X
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 03 May 2026 20:08 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 மே 3ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் மதியம் 3.30 மணிக்கு மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 18.2 ஓவர்களில் 166 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. இதற்கு முந்தைய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறத் தவறிய கொல்கத்தா அணி, ஐபிஎல் 2026 தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. கொல்கத்தாவின் வெற்றிக்கு அங்கரிஷ் ரகுவன்ஷியின் 59 ரன்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. கேப்டன் அஜிங்க்யா ரஹானேவும் அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். முன்னதாக, சுனில் நரைன் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை எட்டி வரலாறு படைத்தார்.

ALSO READ: தொடர்ந்து சொதப்பும் சூர்யா, திலக்.. மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனே விளக்கம்!

166 ரன்கள் இலக்கு:


ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்து 165 ரன்கள் எடுத்தது. வலுவான தொடக்கத்திற்குப் பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் சரிந்து, கடைசி 9 விக்கெட்டுகளை வெறும் 60 ரன்களுக்கு இழந்தது. அபிஷேக் சர்மா வெறும் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இருப்பினும், அதன்பிறகு டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடி, 28 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். ஹெட்டுடன், இஷான் கிஷன் இணைந்து, வெறும் 8.5 ஓவர்களில் அணியை 105 ரன்களுக்குக் கொண்டு சென்றார். இருப்பினும், அதன் பிறகு ஆட்டம் தடுமாறியது.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் விக்கெட் கீப்பர் ரகுவன்ஷி இடையேயான 84 ரன் பார்ட்னர்ஷிப், கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியது.

ALSO READ: அடுத்தடுத்து விதி மீறல்கள்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை!

சுனில் நரைன் வரலாறு:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் வரலாறு படைத்தார். இந்தப் போட்டியில் மொத்தம் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய சுனில் நரைன், இந்தியன் பிரீமியர் லீக்கில் 200 விக்கெட்டுகளை எட்டிய முதல் வெளிநாட்டு பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். நரைன் தற்போது 197 போட்டிகளில் மொத்தம் 201 விக்கெட்டுகளைக் கொண்டுள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார் (215) மற்றும் யுஸ்வேந்திர சாஹல் (228) மட்டுமே அவருக்கு முன்னால் உள்ளனர்.

Follow Us