Team India Womens: இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட்.. இந்திய மகளிர் அணி அறிவிப்பு!
IND W vs ENG W Test: இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை (Indian Womens Cricket Team) பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் (Test) போட்டியானது லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்டேடியமான லார்ட்ஸில் வருகின்ற 2026 ஜூலை 10 முதல் 13 வரை நடைபெற உள்ளது.
வருகின்ற 2026 ஜூன் மாதம் தொடங்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை (Indian Womens Cricket Team) பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் (Test) போட்டியானது லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்டேடியமான லார்ட்ஸில் வருகின்ற 2026 ஜூலை 10 முதல் 13 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுரும், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமை.. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
மேலும், வேகப்பந்து வீச்சாளர் நந்தனி சர்மா மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் என். ஸ்ரீ சரணி ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் நந்தனி சர்மா. மறுபுறம், ஸ்ரீ சரணி இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருந்தாலும், இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதில்லை. இதுமட்டுமின்றி சினே ராணா, ஹர்லீன் தியோல் மற்றும் பிரதிகா ராவல் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். இந்த மூன்று வீராங்கனைகளும் மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான யாஸ்திகா பாட்டியாவும் நீண்ட கால காயம் காரணமாக ஓய்வில் இருந்த பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார்.




இந்திய அணியில் 3 மாற்றங்கள்:
கடந்த 2026 மார்ச் மாதம் பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் இருந்து, இந்த முறை இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வைஷ்ணவி சர்மா, உமா சேத்ரி மற்றும் அமன்ஜோத் கவுர் ஆகியோருக்குப் பதிலாக நந்தினி, யாஸ்திகா மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பிரதிகா ராவல், தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), நந்தினி ஷர்மா, ஹர்லீன் தியோல், சினே ராணா.
ALSO READ: விளையாடாமல் கிடைத்த பரிசு.. டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்ட இந்திய அணி!
இந்தியா – இங்கிலாந்து நேருக்கு நேர் (மகளிர் அணி)
இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே இதுவரை மொத்தம் 15 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்தப் போட்டிகளில் இந்தியா மூன்றில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. மறுபுறம், இங்கிலாந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான மீதமுள்ள 11 டெஸ்ட் போட்டிகள் சமனில் முடிந்துள்ளன.