ஜன நாயகன் படத்தை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துறைத்தது ரிவைசிங் கமிட்டி!
Revising Committee sent Jana Nayagan movie to Election Commission: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் சென்சார் தொடர்பான விசயத்தில் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜன நாயகன்
தமிழ் சினிமாவில் இயக்குநர் எச்.வினோத் எழுதி இயக்கியுள்ள படம் ஜன நாயகன். இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்துள்ளார். இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள இறுதியானப் படம் இது என்று அவர் முன்னதாகவே அறிவித்து இருந்தார். தொடர்ந்து இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்தப் படத்தில் நடிகர் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் நடிகை மமிதா பைஜூ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து பான் இந்திய அளவில் பல பிரபல நடிகர்கள் ஜன நாயகன் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் நடிகர் பாலையா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தப் படத்தை முழுவதுமாக அப்படியே ரீமேக் செய்யாமல் தளபதி விஜய்க்கு ஏற்றமாறி படத்தில் பல மாற்றங்களை செய்துள்ளதாக இயக்குநர் எச்.வினோத் தெரிவித்து இருந்தார்.
மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் மாதம் மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. அந்த இசை வெளியீட்டு விழா தளபதி விஜய்கு ஃபேர்வல் போல நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் உரிய நேரத்தில் கிடைக்காத காரணத்தால் படம் வெளியாகாமல் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் படத்தை தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துறைத்தது கமிட்டி:
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பும்படி தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை, தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழு நேற்று பார்வையிட்டது. திரைப்படத்தைப் பார்வையிட்ட பிறகு, தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதை கருத்தில் கொண்டு, இத்திரைப்படத்தை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்ப அக்குழு முடிவெடுத்தது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
The re-examination committee of the Censor Board has recommended the film #JanaNayagan to the Election Commission due to the Model Code of Conduct being in force. 🗳️
The film JanaNayagan, starring Vijay and directed by #HVinoth, was reviewed by the Censor Board’s revising… pic.twitter.com/5kVqjm7X2r
— Movie Tamil (@_MovieTamil) March 18, 2026
Also Read… Aadhirai Soundarajan: பைக் ரேஸில் இறங்கிய பிக் பாஸ் புகழ் ஆதிரை சௌந்தரராஜன் – வைரலாகும் பதிவு!