Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jana Nayagan : சிங்கம் எப்போதும் சிங்கம்தான்… தளபதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் ‘ஜன நாயகன்’ பட அப்டேட்!

Vijays Birthday Special Jana Nayagan Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தளபதி விஜய். இவரின் முன்னணி நடிப்பில் கடைசிப் படமாக உருவாகி வருவது ஜன நாயகன். வரும் 2025, ஜூன் 22ம் தேதியில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்திலிருந்து சிறப்பான அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Jana Nayagan : சிங்கம் எப்போதும் சிங்கம்தான்… தளபதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக வெளியாகும் ‘ஜன நாயகன்’ பட அப்டேட்!
விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் ஜன நாயகன் அறிவிப்புImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 20 Jun 2025 18:19 PM

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) முன்னணி நடிப்பில் உருவாகிவரும் படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தைத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கிவருகிறார். இந்த படமானது தளபதி விஜய்யின் 69வது திரைப்படமாக கடந்த 2024 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கிய நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுவந்தது. தளபதி விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது. விஜய்யின் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவர் சமீபத்தில்தான் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பை முடித்திருந்தார்.

இந்நிலையில் வரும் 2025, ஜூன் 22ம் தேதியில் தளபதி விஜய்யின் 51வது பிறந்தநாளை (Vijay’s 51st Birthday) முன்னிட்டு இப்படத்திலிருந்து சிறப்பான அப்டேட் வெளியாகவுள்ளது. அந்த அப்டேட் என்னவென்றால், இப்படத்தின் முதல் டீசர் வீடியோ  (Jana Nayagan The First Roar) வரும் 2025, ஜூன் 22ம் தேதி அதிகாலை 12 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்தான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ள நிலையில்,ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.

டீசர் அறிவிப்பைப் பற்றி ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட பதிவு :

ஜன நாயகன் திரைப்படம் :

விஜய்யின் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். கேவிஎன் ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார். விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது. இப்படத்தில் நடிகர்கள் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, பிரியாமணி மற்றும் நரேன் எனத் தென்னிந்திய நடிகர்கள் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.

விஜய்யின் இறுதி படம் என்பதால் சுமார் ரூ. 300 கோடிக்கும் மேல் பட்ஜெட்டில் உருவாகிவருவதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2026, ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியாகிறது.

ஜன நாயகன் ஷூட்டிங் முடிந்ததா?

இயக்குநர் ஹெச். வினோத்தின் முன்னணி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம்தான் இந்த ஜன நாயகன். விஜய்யின் இறுதி திரைப்படம் என்பதால் இப்படத்தை யார் இயக்கவுள்ளார் எனப் பல எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், அந்த அதிர்ஷ்டத்தை இயக்குநர் ஹெச். வினோத் தட்டிப் பறித்தார். இவரின் இயக்கத்தில் உருவாகிவரும் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பூஜைகளுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து இப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் முழுமையாக அரசியலில் இறங்கவுள்ள நிலையில், விரைவாகப் படத்தின் ஷூட்டிங்கை முடிக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங்கை விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முடித்துள்ளனர். பூஜா ஹெக்டே இதைப் பற்றி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இவர்களின் காட்சிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக முடிவடைந்ததாக எனப் படக்குழு இதுவரை அறிவிப்புகளை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.