எவ்வளவு நாள் ஆச்சு இப்படி பார்த்து… சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட டீசரை புகழ்ந்த கார்த்தி

Actor Karthi praised Suriyas Vishwanath and Sons Movie Teaser | நடிகர் சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் விஸ்வநாத் & சன்ஸ். இந்தப் படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில் அதனை நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார்.

எவ்வளவு நாள் ஆச்சு இப்படி பார்த்து... சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட டீசரை புகழ்ந்த கார்த்தி

கார்த்தி

Published: 

17 Mar 2026 18:32 PM

 IST

தமிழ் சினிமாவில் இரண்டாம் தலைமுறை நடிகராக வலம் வருகிறார்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகன்கள் தான் இவர்கள் இருவரும். இதில் மூத்த மகன் சூர்யா முன்னதாகவே தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். அவர் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று இருந்த நிலையில் அவரது தம்பி கார்த்தி தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து அண்ணன் சூர்யா மற்றும் தம்பி கார்த்தி இருவரும் அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். மேலும் அவர்களின் படங்கள் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அந்த வகையில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்தடுத்து 3 படங்கள் உருவாகி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் முதலாவதாக கருப்பு படமும் இரண்டாவதாக விஸ்வ்நாத் அண்ட் சன்ஸ் படமும் மூன்றாவதாக சூர்யா 47 படமும் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் நேற்று மார்ச் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகர் கார்த்தியும் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எவ்வளவு நாள் ஆச்சு இப்படி பார்த்து:

அதன்படி இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தினை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகை மமிதா பைஜூ முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் படத்தின் டீசரைப் பார்த்த நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டீசரில் மிகவும் இயல்பானதும், வசீகரமானதுமான ஏதோ ஒன்று இருக்கிறது. மேலும் எவ்வளவு நாள் ஆச்சு இப்படி பார்த்து என்று அவரது அண்ணன் சூர்யாவின் கதாப்பாத்திரத்தை பாராட்டியுள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… திரையரங்குகளில் சூப்பர் ஹிட்… ஓடிடியில் என்ன நிலை? பூக்கி படத்தின் விமர்சனம் இதோ!

நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… கார்த்திக் சுப்புராஜ் – ராணா இணைந்து தயாரிக்கும் புது படத்தின் டைட்டில் வெளியீடு!

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்