Suriya: ஜோதிகாவிடம் அனுமதி வாங்கியும், வாங்காமலும் நடித்த காட்சிதான் அது – சூர்யா பகிர்ந்த விஷயம்!

Suriya Reveals Kaakha Kaakha Filming Secret with Jyothika: நடிகர் சூர்யாவின் நடிப்பில் தொடர்ந்து புதிய புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த சூர்யா, அவரின் மனைவி ஜோதிகாவிடம் அனுமதி வாங்காமல் படத்தில் நடித்த காட்சி குறித்து பேசியுள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Suriya: ஜோதிகாவிடம் அனுமதி வாங்கியும், வாங்காமலும் நடித்த காட்சிதான் அது - சூர்யா பகிர்ந்த விஷயம்!

ஜோதிகா மற்றும் சூர்யா

Published: 

27 Apr 2026 08:44 AM

 IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவர் தமிழ், தெலுங்கு மற்றும் தற்போது மலையாள சினிமாவிலும் திரைப்படங்களை நடிக்க தொடங்கிவிட்டார். நடிகர் சூர்யாவின் நடிப்பில் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகிவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு இன்னும் சிறப்பான வரவேற்புகள் இருந்துவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவிற்கு ஒரு வெற்றி திரைப்படமாகவும் இப்படம் அமைந்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் தொடர்ந்து புது புது திரைப்படங்களும் தயாராகிவருகிறது. தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடியாக சூர்யா மற்றும் ஜோதிகா (Jyothika) இருவரும் இருந்துவருகிறார்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 7 படங்களுக்கும் மேல் இணைந்து நடித்துள்ளனர். அந்த வகையில் முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூர்யா, காக்க காக்க படத்தின் ஷூட்டிங்கின்போது, ஜோதிகாவிடம் அனுமதி வாங்கியும், வாங்காமலும் நடித்த காட்சி குறித்து பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: தனது இயக்கத்தில் அடுத்த படம் எப்போது உருவாகும்? – ரசிகர்களுக்கு தனுஷ் சொன்ன விளக்கம்!

காக்க காக்க படத்தின் ஷூட்டிங் குறித்து பேசியிருந்தார் சூர்யா:

அந்த நிகழ்ச்சியில் சூர்யா பேசுகையில், “காக்க காக்க படத்தின்போதே நானும், ஜோதிகாவும் பேச ஆரம்பித்துவிட்டோம். அப்போது ஒரு சவாலான காட்சியில் கௌதம் மேமன் என்னை நடிக்கமுடியுமா? என கேட்டார். அப்போது துரத்திலிருந்து என்னை பார்த்த ஜோதிகா, கண்ணை காட்டி அந்த காட்சியில் நடிக்கவேண்டாம் என மிரட்டினார். நான் அவரிடம், இந்த ஒரு ஷாட் பண்ணிறேன் என கேட்டேன்.

இதையும் படிங்க: கருப்பசாமி பக்தர்களுக்காக ஸ்பெஷல் பாடல்.. கருப்பு பட ஆடியோ லான்ச் குறித்து வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி!

உடனே அவர் என்னை முறைத்து பார்த்தபடியே இருந்தார். ஜோதிகாவிடம் அனுமதி வாங்கியும், வாங்காமலும் நடித்த காட்சி அது. காக்க காக்க படத்தில் ஒரு வீட்டின் மேலிருந்து, தண்ணீருக்குள், மாயா என கேமராவை பார்த்தபடியே விழும் காட்சிதான் அது. அந்த காட்சியில் நடிக்கும்போதுதான், ஜோவிடம் அனுமதி வாங்கியும், வாங்காமலும் பண்ணினேன்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

தனது புதிய படம் குறித்து சூர்யா வெளியிட்ட எக்ஸ் பதிவு:

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடியானது கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கும் மேல், தமிழ் சினிமாவில் சிறந்த ஜோடியாக இருகிறார்கள். இவர்கள் தற்போது படங்களில் இணைந்து நடிக்காவிட்டாலும், நிஜ ஜோடியாக மக்கள் மத்தியில் பிரபலம் அதிகம். அந்த வகையில் தற்போது நடிகை ஜோதிகா முழுவதுமாக இந்தி மற்றும் மலையாள சினிமாவில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?