Suriya: வேஷ்டி சட்டையில்.. கருப்பசாமியாக மாஸ் என்ட்ரி கொடுத்த சூர்யா!
Suriya Mass Entry: நடிகர் சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் கருப்பு. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றுவந்த நிலையில், அதில் வேஷ்டி சட்டையுடன் மாஸ் எண்டரி கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
கோலிவுட் சினிமாவில் கடந்த 2024ம் ஆண்டில் சூர்யா45 (Suriya45) என அறிவிக்கப்பட்டிருந்த திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இதை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, சூர்யா லீட் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு (Suriya) ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த ஜோடியானது இறுதியாக ஆறு என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படமானது சூர்யாவின் 45வது திரைப்படம் என்ற நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இதை ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இதுவரை மொத்தம் 3 பாடல்கள் இதிலிருந்து வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று 2026 ஏப்ரல் 26ம் தேதியில் மதுரையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது. இந்த விழாவில் வேஷ்டி சட்டையுடன், கருப்பசாமியாகவே சூர்யா மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: விஜய் டிவி ரசிகர்களே ரெடியா? துரந்தர் 1 படத்தை எப்போது, எந்த நேரத்தில் டிவியில் பார்க்கலாம்?
கருப்பு பட ஆடியோ லாஞ்சில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூர்யா:
🥹 @Suriya_offl Kadavuley 🙏#Suriya | #Karuppu | #KaruppuAudioLaunch pic.twitter.com/z2WnqVH6i3
— Actor Suriya™ (@teamactorsuriya) April 26, 2026
கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், அதில் சாய் அப்யங்கர் வெரப்பா பாடலை பாட, வேஷ்டி ஜட்டியுடன், கருப்பசாமியாகவே சூர்யா மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கருப்பசாமி பக்தர்களுக்காக ஸ்பெஷல் பாடல்.. கருப்பு பட ஆடியோ லான்ச் குறித்து வீடியோ வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி!
கருப்பு திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சாரமூடு பேச்சு:
#Karuppu – Production designer Arun Venjaramoodu Speech 🎤:
“I have seen aruvas at 10 feet and 20 feet. But for the song in this film, we had made an aruvaa at 85 feet..👀💥I don’t know if I can do such a big film again. I am waiting to see the reactions from the audiences in…
— Laxmi Kanth (@iammoviebuff007) April 26, 2026
இசை வெளியீட்டு விழாவில், பேசிய அவர், கருப்பு படமானது மிரமாண்டமான லெவலில் வந்துள்ளதாகவும். பொதுவாக 10 அடி, 20 அடி அருவாள்தான செய்திருப்போம். ஆனால் இந்த படத்திற்கு 80 அடி அறிவா செய்திருந்தோம். இப்படி ஒரு பெரிய ஸ்கேல் ல இன்னும் ஒரு படம் பண்ண முடியுமா னு தெரில. ஆனால் இந்த திட்டம் ரொம்ப ஸ்பெஷல். இப்போ தியேட்டர்ல ஆடியன்ஸ் ரியாக்ஷன் பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கேன் என அதில் அவர் தெரிவித்திருந்தார்.