AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு.. இன்றைய நிலவரம்!

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

Gold Price : உயர்ந்தது தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு.. இன்றைய நிலவரம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Apr 2026 11:00 AM IST

சென்னை, ஏப்ரல் 27 : ஈரான் போருக்கு (Iran War) மத்தியில் தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் ஏற்ற, இறக்கத்தில் இருக்கும் தங்கம்  விலை

ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு மற்றும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டு வருகின்றன. சில உலக நாடுகளால் ஹோர்முஸ் நீரிணையை கடந்து தங்களது எண்ணெய் கப்பல்களை கொண்டுவர முடியவில்லை என்பதால் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் உள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தில் இருந்து திசை திரும்பியுள்ளது. இந்த சூழலில் தங்கம் பெரிய அளவில் விலை உயர்வை சந்திக்காமலும், வீழ்ச்சியை சந்திக்காமலும் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : அதிகரிக்கும் யுபிஐ மோசடிகள் – இதையெல்லாம் பண்ணாதீங்க – எச்சரிக்கும் நிபுணர்கள்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,230-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us