Suriya47: சிங்கம் இஸ் பேக்.. போலீஸ் அதிகாரி வேடத்தில் சூர்யா. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Suriya47 Shooting Begins: தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர்தான் சூர்யா. இவர் தற்போது தமிழ் சினிமாவை தொடர்ந்து, தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் மலையாள மொழியில் தயாராகிவரும் சூர்யா47 படத்தில் சூர்யா இணைந்துள்ளார்.

சூர்யா47 திரைப்படம்
மலையாள சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் ஜீத்து மாதவன் (Jithu Madhavan). இவரின் இயக்கத்தில் 2024ல் வெளியாகி தென்னிந்திய மக்களிடையே வரவேற்பை பெற்ற படம்தான் ஆவேஷம் (Aavesham). இந்த படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமான இவர், தற்போது நடிகர் சூர்யாவை (Suriya) வைத்து புது படத்தை இயக்கிவருகிறார். இந்த படமானது தற்காலிகமாக சூர்யா47 (Suriya47) என அழைக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் கடந்த 2025 டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. இப்படத்தின் ஷூட்டிங் மற்ற நடிகர்களை கொண்டு நடைபெற தொடங்கிய நிலையில், இன்று 2025 டிசம்பர் 19ம் தேதியில் இந்த ஷூட்டிங்கில் நடிகர் சூர்யா இணைந்துள்ளார். இவர் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venkey Atluri) இயக்கத்தில் உருவாகிவரும் சூர்யா46 (Suriya46) படத்தின் ஷூட்டிங்கை சமீபத்தில் முடித்த நிலையில், உடனடியாக சூர்யா47 பட ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.
மலையாளத்தில் உருவாகும் இப்படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகிவருகிறது. இந்த வீடியோவின் கீழ் ரசிகர்கள் “சிங்கம் இஸ் பேக்” என கருத்துக்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சரத்குமார் – சண்முக பாண்டியனின் அதிரடி கதையில்… கொம்புசீவி படம் எப்படி இருக்கு.. விமர்சனங்கள் இதோ!
இணையத்தில் வைரலாகும் சூர்யா47 திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ :
#Suriya47 Fever 🤒💥 Singam is Back
pic.twitter.com/VJc7gWEIs9— Tiruttani Suriya Fort (@TiruttaniSfc) December 19, 2025
இந்த வீடியோவில் க்ளீன் ஷேவ் லுக்கில், காவல்துறை அதிகாரி காஸ்டியூமில் சூர்யா நடந்துவருவதுபோன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஷூட்டிங்கானது கேரளாவில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது போலீஸ் அதிகாரி வேடத்தில் சூர்யா இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
சூர்யா47 படத்தின் டைட்டில் எப்போது ரிலீஸ் :
இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா நஸீம் நடிக்கிறார். மேலும் மலையாள இளம் நடிகர் நஸ்லென் இப்படத்தின் மிக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் ஜித்து மாதவன் இயக்க இப்படத்தை, சூர்யாவின் புது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் தயாரித்துவருகிறது. மேலும் இதில் பிரபல இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கவுள்ளார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் அற்புதமான நடிகர்… பராசக்தி படத்திற்கு ஓகே சொன்னது இப்படித்தான்- சுதா கொங்கரா!
இந்த படமானது முற்றிலும் ஆக்ஷன் க்ரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கவுள்ளதாம். இப்படம் வரும் 2026ம் ஆண்டு ஓணம் அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் டைட்டில் வரும் 2025 டிசம்பர் 25ம் தேதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.