துல்கர் சல்மானிடம் ஒரு காதல் கதை சொன்னேன்… ஆனால் – சுதா கொங்கரா ஓபன் டாக்
Sudha Kongara: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுதா கொங்கரா. இவர் தற்போது பராசக்தி படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் துல்கர் சல்மானுக்கு காதல் கதைக் கூறியது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

துல்கர் சல்மான் - சுதா கொங்கரா
தமிழ் சினிமாவில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சூரரைப் போற்று. கொரோனா காலத்தில் இந்த சூரரைப் போற்று படம் உருவானதால் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகாமல் ஓடிடியில் வெளியானது. இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்து இருந்தார். இயக்குநர் சுதா கொங்கராவின் பெண் கதாப்பாத்திரங்கள் மிகவும் வலிமையனாதாக இருப்பது போல இந்தப் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளியின் கதாப்பாத்திரமும் மிகவும் வலிமையானதாக காட்டபட்டு இருந்தது. மேலும் படம் திரையரங்குகளில் வெளியான போது அபர்ணாவின் பொன்னி கதாப்பாதிரத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் பொன்னி மாதிரி ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் சூர்யாவை வைத்து புறநானூறு என்ற படத்தை இயக்குவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்தப் படம் எதிர்பாராதவிதமாக கைவிடப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் துல்கர் சல்மானிடம் காதல் கதை கூறியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
துல்கர் சல்மானிடம் ஒரு காதல் கதை சொன்னேன்:
அதன்படி சுதா கொங்கரா பேட்டி ஒன்றில் பேசியபோது கூறியதாவது, புறநானூறு கதையைத் தள்ளிவைத்தபோது, நான் துல்கர் சல்மானிடம் ஒரு காதல் கதையை விவரித்தேன். ஆனால் அந்தக் காதல் கதை பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட வேண்டியதாக இருந்தது. அதில் கடல், இரண்டு நாடுகள் என பல அம்சங்கள் இருந்தன. அதனால் அது நடக்கவில்லை. காதல் படங்கள் ஒரு குறிப்பிட்ட பட்ஜெட்டிற்கு மேல் செல்ல முடியாது, ஆனால் அதிரடிப் படங்களை அதிக பட்ஜெட்டில் எடுக்கலாம், ஏனெனில் அவை பரந்த பார்வையாளர்களைச் சென்றடைகின்றன என்று இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்து இருந்தார்.
Also Read… தனுஷின் D 56 படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்? வைரலாகும் தகவல்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#SudhaKongara:
“When I got to know #Puranaanooru, was shlved, i narrated a Love story to #DulquerSalmaan♥️✨. But that love story was large scale which is expensive, which had an ocean, 2 countries etc🌊✈️. So it didn’t happen. Love films cannot go beyond a certain budget, but… pic.twitter.com/xO1qlaCSNh— AmuthaBharathi (@CinemaWithAB) January 8, 2026
Also Read… 2026-ம் ஆண்டில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் நீங்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் எது?