சேயோன் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு இத்தனை கோடிகள் சம்பளமா? வைரலாகும் தகவல்
Sivakarthikeyan salary for Seyon movie: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் சேயோன். இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் எத்தனை கோடிகள் சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.

சேயோன்
தமிழ் சினிமாவில் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார். அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை தொடர்ந்து 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதில் 25-வது படமாக இறுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படம் இந்தி எதிர்ப்புக் கொள்கையை மையமாக வைத்து திரைய்ரங்குகளில் வெளியாகி இருந்த நிலையில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் அன் கட் வெர்ஷன் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் சேயோன். இந்தப் படம் தொடர்பான அப்டேட் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்த சேயோன் படத்தை இயக்குநர் சிவக்குமார் முருகேசன் எழுதி இயக்க உள்ளார். இவர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான தாய் கிழவி என்ற படத்தை எழுதி இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சேயோன் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரிப்பாளர் கமல் ஹாசன் தயாரிக்க உள்ளார்.
சேயோன் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு இத்தனை கோடிகள் சம்பளமா?
சேயோன் படத்திற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூபாய் 60 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. முழு படமும் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மொத்தம் 80 நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது, அதில் 65 நாட்கள் சிவகார்த்திகேயனின் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16 ஆம் தேதி ஆயுதபூஜைக்கு படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆக்ஷன், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் மற்றும் கடவுள்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பக்கா கிராமப்புற பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read… தவறான புரிதலால் பாதிக்கப்படும் மாற்றுத்திறனாளி தம்பதி… விக்ருதி படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Seyon – #Sivakarthikeyan is said to be paid a RECORD-whooping ₹60 Cr+ salary. The entire movie is planned to be made on a compact budget, with shooting 🎥 scheduled to start in April. A total of 80 days shooting planned, out of which 65 days are allotted for #SK’s portions. The… pic.twitter.com/D4AyecX0Ua
— Movies Singapore (@MoviesSingapore) March 2, 2026
Also Read… Tripti Dimri: உண்மையான அழகே அதுதான் – அனிமல் பட நடிகை திருப்தி டிம்ரி பேச்சு!