சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்
Sivakarthikeyan and Venkat Prabhu Movie Update: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்தின் பணிகளில் பிசியாக இருக்கும் நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கட் பிரபு. சினிமா குடும்பத்தை சேர்ந்த இவர் முன்னதாக நடிகராக பலப் படங்களில் நடித்து வந்தார். தொடர்ந்து நாயகனாகவும், நாயகனின் நண்பனாகவும் பலப் படங்களில் நடித்துள்ளார் வெங்கட் பிரபு. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் அறிமுகம் ஆன நடிகர்கள் பலர் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக வலம் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, கோவா, மங்காத்தா, சென்னை 28 பாகம் 2, மாநாடு மற்றும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.
அதன்படி இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து இருந்தார். இது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 68-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு யாரை இயக்க உள்ளார் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் எப்போது?
இந்த நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் பிசியாக நடித்து வந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு தொடங்க உள்ளது குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
Also Read… விஜய் சார் உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது – நடிகை பூஜா ஹெக்டே
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#SivaKarthikeyan — #VenkatPrabhu Film Shooting Feb Month Start Plan ….👋🏼
An actor is expected to make a special appearance in this film. But he is asking for a huge salary. Let’s wait and see if he will act in this film.#SK26 | #Parasakthi https://t.co/2mfsbI7bC8 pic.twitter.com/U8PiUNj500
— Movie Tamil (@_MovieTamil) December 29, 2025
Also Read… பிக்பாஸில் விக்ரம் மற்றும் திவ்யா இடையே வெடித்த சண்டை… வைரலாகும் வீடியோ!