ஒன்னுமே இல்லாத போதும் என்ன நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க… மனைவி ஆர்த்தி குறித்து நெகிழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்

Actor Sivakarthikeyan: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் மதராஸி. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் புரமோஷன் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி குறித்து பேசியது தற்போது வரைலாகி வருகின்றது.

ஒன்னுமே இல்லாத போதும் என்ன நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க... மனைவி ஆர்த்தி குறித்து நெகிழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்

மனைவி ஆர்த்தி உடன் நடிகர் சிவகார்த்திகேயன்

Published: 

01 Sep 2025 13:25 PM

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து தற்போது வெள்ளித் திரையில் முன்னணி நடிகர்களின் பட்டியளில் இடம் பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). இவர் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக சிலப் படங்களில் நடித்து இருந்த இவர் அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து காமெடி கதையை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நாயகனாக நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் பிறகு ஃபேமிலி செண்டிமெண்டை கையில் எடுத்தார். காமெடியைப் போலவே ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றாக கை கொடுத்தது என்றே சொல்லலாம். இப்படி காமெடி ஃபேமிலி செண்டிமென் படங்களில் ஹிட் கொடுத்துக்கொண்டே இருந்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக கையில் எடுத்தது ஆக்‌ஷன். ஆக்‌ஷன் படங்களில் சிவகார்த்திகேயன் எப்படி செட் ஆவார் என்று பலர் கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.

அவர்கள் எல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு ஜிம்மிற்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக மாற்றி ஒரு லுக்கை காட்டினார் நடிகர் சிவகார்த்திகேயன். இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தில் இராணுவ வீரராக நடித்து அசத்தி இருப்பார். இந்தப் படத்திற்காக இவர் உடல் எடையை அதிகரித்து மிகவும் கம்பீரமாக காட்சி அளித்து இருப்பார். இவர் தற்போது மதராஸி படத்தின் வெளியீட்டு பணிகளில் பிசியாக இருக்கிறார்.

மதராஸி பட விழாவில் மனைவி குறித்து பேசிய சிவகார்த்திகேயன்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகின்ற செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்த நிலையில் நடிகை ருக்மினி நாயகியாக நடித்துள்ளார். படம் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் அனைவரும் பிசியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று தெலுங்கானாவில் மதராஸி படத்தின் புரமோஷன் பணிகளில் நடிகர் சிவகார்த்திகேயன் ஈடுபட்ட போது அவரிடம் உங்களது வாழ்க்கையில் உங்களை அதிகம் ஊக்கப்படுத்தியது யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் எனது கல்லூரி நண்பர்கள் மற்றும் என் மனைவி.

Also Read… பெரும்பான்மையான நடிகர்கள் ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்கள் – நடிகை ருக்மினி வசந்த்

என் மனைவி பத்தி சொல்லனும்னா என்கிட்ட ஒன்னுமே இல்லாதப்போவே என்ன நம்பி அவங்க கல்யாணம் பண்ணிகிட்டாங்க. அப்போ எனக்கு மாசம் நிலையான சம்பளம் கூட நிலையா இல்ல. அவங்களுக்கு நான் வாழ்க்க முழுக்க நன்றி சொல்லனும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்து இருந்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ:

Also Read… Ajith Kumar : இந்தியாவில் இதை ஊக்குவிப்பது முக்கியம்.. மோட்டார் ஸ்போர்ட்ஸ் குறித்து அஜித் குமார் பேச்சு!