பிதாமகன் படத்திற்காக சூர்யா செய்த செயல் – சிங்கம்புலி ஓபன் டாக்!

Actor Singampuli talks about Suriyas Hard work in Pithamagan Movie: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தவர் சிங்கம்புலி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் சூர்யா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிதாமகன் படத்திற்காக சூர்யா செய்த செயல் - சிங்கம்புலி ஓபன் டாக்!

பிதாமகன்

Published: 

18 Mar 2026 16:40 PM

 IST

தமிழ் சினிமாவில் கடந்த 2003-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பிதாமகன். ஆக்‌ஷன் க்ரைம் ட்ராமா பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் பாலா எழுதி இயக்கி இருந்தார். இயக்குநர் பாலா இயக்கதில் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே அந்தப் படம் நிச்சயமாக டார்க் ஜானரில் தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. படத்தின் ஆரம்பத்தில் எவ்வளவு ஜாலியாக கொண்டு சென்றாலும் இறுதியில் நம் மனதை பதபதைக்க வைக்கும் ஒன்றாகவே இயக்குநர் பாலாவின் படம் இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அப்படி இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியாகி தமிழக மக்களிடையே மட்டும் இன்றி தொடர்ந்து தென்னிந்திய சினிமா ரசிகர்கலிடையேயு கவனத்தை ஈர்த்தப் படம் பிதாமகன்.

இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் முன்னணி வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் லைலா,
சங்கீதா, கருணாஸ், மனோபாலா, சிம்ரன், டி.பி.கஜேந்திரன், மு ராமசுவாமி, விஸ்வேஸ்வர ராவ், முத்துகாளை, ராஜன், மகாதேவன், கஞ்சா கருப்பு ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்த நிலையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

பிதாமகன் படத்திற்காக சூர்யா செய்த செயல்:

இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த சூர்யா படத்திற்காக எவ்வளவு கடின உழைப்பை போட்டார் என்பது குறித்து படத்தில் பணியாற்றிய சிங்கம் புலி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஒரு கழிவறை காட்சி இருக்கும். அந்த காட்சியில் நடிக்கும் போது அது மிகவும் இயல்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக சூர்யா தனது சொந்த கழிவறையை வெஸ்டனில் இருந்து இந்தியனாக மாற்றி அதற்கு பழக்கப்படுத்திக்கொண்டார் என்று தெரிவித்தார். மேலும் இந்தப் படத்திற்காக தனது தனிப்பட்ட வாழ்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டார் என்று சிங்கம் புலி தெரிவித்து இருந்தார்.

Also Read… எவ்வளவு நாள் ஆச்சு இப்படி பார்த்து… சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட டீசரை புகழ்ந்த கார்த்தி

இணையத்தில் வைரலாகும் சிங்கம் புலி பேச்சு:

Also Read… Kayadu Lohar: எனக்கு அந்த நடிகருடன் இணைந்து நடிக்கணும்-னு ஆசை.. ஆனால் – கயாடு லோஹர் சொன்ன விஷயம்!

Follow Us
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்