விஜய்யின் தலைவா பட பிரச்சனையை பேசிய சத்யராஜ்.. அதற்கு சிபி சத்ரயாஜ் போட்ட பதிவு என்னனு பாருங்க!
Sibi Sathyaraj X Post: சினிமாவில் நாயகனாக இருந்து, தற்போது அரசியல்வாதியாகவும் மாறியிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் பிரச்சாரம் ஒன்றில் பேசிய சத்யராஜ், விஜய்யின் தலைவா பட பிரச்சனையை தாக்கி பேசியிருந்தார். சத்யராஜின் பேச்சுக்கு பதிலளிக்கும் விதத்தில், அவரின் மகன் சிபி சத்யராஜ் வெளியிட்ட பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நாயகனாக படங்களில் நடித்து ஹிட் கொடுத்துவருபவர் தளபதி விஜய் (Thalapathi Vijay). இவர் சினிமாவை தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் அரசியலில் இறங்கியுள்ளார். கடந்த 2024ம் ஆண்டிலே தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்ற கட்சியை தொடங்கியிருந்தார். அந்த வகையில் அதற்கு முன் மக்களுக்கு தனது ரசிகர்கள் மன்றம் மூலம் சமூக சேவையில் ஈடுபட்டுவந்த நிலையில், இதையடுத்து தனது அரசியல் கட்சியின் மூலமாக சேவை செய்ய வந்திருப்பதாக தெரிவித்திருந்தார். அந்த வகையில் சினிமாவில் இவரின் நடிப்பில் இறுதியாக ஜன நாயகன் (Jana Nayagan) படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படமானது விஜய்யின் 69வது படமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் இப்படம் முழுவதுமாக இணையத்தில் கசிந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் பெரம்பூர் பிரச்சாரத்தின்போது நடிகர் சத்யராஜ் (Sathyaraj), விஜய்யின் தலைவா (Thalaiva) படத்தின் பிரச்சனையை தாக்கி பேசியிருந்தார். இதற்கு அவரும் மகன் சிபி சத்யராஜ் Sibi sathyaraj), தந்தை சத்யராஜின் கருத்திற்கு பதிலளிக்கும் விதத்தில், விஜய் பேசிய வசனத்தை பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: நயன்தாரா – கவினின் ‘ஹாய்’ படத்தின் முதல் பாடலை பாடிய ஜி.வி.பிரகாஷ் – காமெடியாக வெளியான புரோமோ!
விஜய்க்கு ஆதரவாக நடிகர் சிபி சத்யராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 18, 2026
விஜய் குறித்து சத்யராஜ் வைத்த கருத்து:
நடிகர் சத்யராஜ், “தலைவா படத்தின் ரிலீஸ் பிரச்னையின்போது, விஜய் ஜெயலலிதா அம்மா முன்னே, அம்மா அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள் மா. எப்படியாவது என்னோட தலைவா படத்தை ரிலீஸ் பண்ணிவிடுங்க அம்மா என கேட்டார். நானும் அதே போலத்தான் இப்போதும் விஜய் மரியாதையுடன் இருப்பாரு என நினைத்தால், அவர் மரியாதையை இல்லாமல் தமிழக முதல்வரை பற்றி பேசுகிறார்” என அதில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அடினா அடி பொக்கு பொக்குனு அடி.. நாங்க நாலு பேரு பாடல் விமர்சனம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!
அந்த வகையில் தனது தந்தை சத்யராஜ் பேசிய விஷயத்திற்கு, பதிலளிக்கும் விதத்தில் சிபி சத்யராஜ் பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் தளபதி விஜய், சர்க்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது பேசியிருந்த வசனத்தை வெளியிட்டிருந்தார். அதில், “உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்முன்னும் இருந்தா வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்” என்ற பதிவை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவிவருகிறது. தந்தை சத்யராஜ் விஜயை தாக்கி பேசுகிறார், ஆனால் மகன் சிபி சத்யராஜ் விஜய்க்கு ஆதரவாக இருக்கிறார் என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுவருகிறது.